Page Loader

உலகம் செய்தி

உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.

22 Feb 2024
சீனா

இந்தியா-மாலத்தீவுகள் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், மலேவிற்கு வரும் சீனா ஆராய்ச்சிக் கப்பல்

இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான பதற்றம் நிலவி வரும் இந்த நேரத்தில், ஒரு சீனக் ஆராய்ச்சி கப்பல், மாலத்தீவின் கடற்பகுதியில் நுழைந்து, அதன் தலைநகரான மாலேயில் நிறுத்தப்பட உள்ளது.

21 Feb 2024
இஸ்ரேல்

போர் நடந்து வரும் வடக்கு காசா பகுதிக்கான உதவிகளை நிறுத்தியது ஐநா உணவு நிறுவனம் 

இஸ்ரேலின் தொடர்ச்சியான துப்பாக்கிச் சூடு மற்றும் சிவில் ஒழுங்கு சீர்குலைவு காரணமாக வடக்கு காசாவிற்கு வழங்கி வந்த உணவு விநியோகத்தை ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம்(WFP) இடை நிறுத்தியுள்ளது.

21 Feb 2024
அமெரிக்கா

அமெரிக்க செனட் பதவிக்கு போட்டியிடும் முதல் Gen Z அமெரிக்க-தமிழர்: யாரிந்த அஸ்வின் ராமசாமி?

24 வயதான மென்பொருள் பொறியியலாளர் அஸ்வின் ராமசாமி, மாநில செனட் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் அமெரிக்க அரசியலில் நுழையும் முதல் Gen Z இந்திய-அமெரிக்கர் என்ற பெயரை எடுத்துள்ளார்.

நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் நிறைவு: பாகிஸ்தானில் உருவாகிறது புதிய கூட்டணி அரசு 

பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே பல நாட்களாக தீவிர பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில், புதிய கூட்டணி ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் ஒப்பந்தமிட்டுள்ளன.

20 Feb 2024
ரஷ்யா

வடகொரிய அதிபருக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட காரை பரிசளித்தார் ரஷ்ய அதிபர் புதின் 

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின், "தனிப்பட்ட பயன்பாட்டிற்காக" ஒரு காரைப் பரிசளித்தார் என்று வட கொரிய அதிகாரப்பூர்வ ஊடகம் தெரிவித்துள்ளது.

19 Feb 2024
ரஷ்யா

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னியின் உயிரிழப்புக்கு பின்னால் இருக்கும் மர்மம்: அவரது உடலில் காயங்கள் இருந்ததாக தகவல் 

பிரபல ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரும் அதிபர் விளாடிமிர் புதினின் விமர்சகருமான அலெக்ஸி நவல்னி உயிரிழந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆர்க்டிக்கில் உள்ள மருத்துவமனை சவக்கிடங்கில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

பாகிஸ்தான் பிரதமர் பதவியை பிலாவல் பூட்டோ ஏற்க மறுத்ததாக தகவல்   

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி பாகிஸ்தான் பிரதமர் பதவியை தான் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

18 Feb 2024
அமெரிக்கா

யூடியூப் முன்னாள் CEOவின் மகன் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சடலமாக மீட்பு 

யூடியூப்பின் முன்னாள் சிஇஓ சூசன் வோஜ்சிக்கியின் மகனான மார்கோ ட்ரோப்பர்(19), செவ்வாய்கிழமை(பிப்ரவரி 13) அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருக்கும் தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

16 Feb 2024
அமெரிக்கா

இந்திய மாணவர்கள் மீதான வன்முறை தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம்

அமெரிக்கா, இந்திய மற்றும் இந்திய-அமெரிக்க மாணவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

ஷெஹ்பாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகவும், மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராகவும் தேர்வு

இழுபறியில் இருந்த பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கன்சாஸ் நகரில் துப்பாக்கிச் சூட்டில் 1 பேர் மரணம்; 21 பேர் காயம்

மிசோரியின் கன்சாஸ் சிட்டியின் டவுன்டவுனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்துள்ளார் மேலும் 21 பேர் காயமடைந்துள்ளனர்.

14 Feb 2024
அபுதாபி

அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும்.

பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் பெயர் பரிந்துரைப்பு

பாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக, நவாஸ் ஷெரீப், தனது சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை பரிந்துரைத்துள்ளார்.

13 Feb 2024
இஸ்ரேல்

ரஃபா தாக்குதலை அடுத்து அனைத்து UNRWA அலுவலகங்களையும் அகற்ற இஸ்ரேல் திட்டம் 

நாட்டிலுள்ள அனைத்து UNRWA அலுவலகங்களையும் இஸ்ரேல் மூட திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணி அமைக்க வாய்ப்பு 

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு

இம்ரான் கானின் பாகிஸ்தான்-தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் பிற கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பொதுத்தேர்தலின் போது மோசடி நடந்ததாகக் கூறப்படும் சில வாக்குச் சாவடிகளில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் (ECP) மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிட்டுள்ளது.

11 Feb 2024
பிரிட்டன்

புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் வெளியிட்ட முதல் அறிக்கை

புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தனக்கு ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

11 Feb 2024
உலகம்

சிறுவர் பாலியல் கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்கியதற்காக ஹங்கேரியின் ஜனாதிபதி ராஜினாமா

ஹங்கேரியின் ஜனாதிபதி கட்டலின் நோவக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் இம்ரான் கானுக்கு ஜாமீன்

பாகிஸ்தான் ராணுவத்தின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான 12 வழக்குகளில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோருக்கு பாகிஸ்தான் தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம் 

தீவிரவாத தாக்குதல் மற்றும் பிற பிரச்சனைகளால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாகி இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் தங்கள் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.

பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை

பாகிஸ்தானின் தேசிய தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் பெரும்பாலோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன், 106 நாடாளுமன்ற இடங்களில் 47 இல் வெற்றி பெற்றனர் என ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது.

வேலை நேரத்திற்குப் பிறகு முதலாளிகளின் அழைப்பை புறக்கணிக்க உரிமை: ஆஸ்திரேலியாவில் அமலாகிறது புதிய சட்டம்

ஆஸ்திரேலியா அரசு ஒரு அற்புதமான உரிமை சட்டத்தை செயல்படுத்தத் தயாராகி வருகிறது.

08 Feb 2024
இந்தியா

"இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு

தற்போதைய உலகளாவிய சூழ்நிலையில் இந்தியா புத்திசாலித்தனமாக விளையாடி வருவதாகவும், ரஷ்யாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அமெரிக்காவின் அதிபர் வேட்பாளர் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.

வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல்

பொருளாதார நெருக்கடி, அதிகரித்து வரும் தீவிரவாதத் தாக்குதல்கள், அண்டை நாடுகளுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானில் இன்று தேர்தல் நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் வேட்பாளர்கள் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் பலி

பாகிஸ்தானில் நாளை பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் தேர்தல் அலுவலகங்களை குறிவைத்து இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதல்களால் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர்.

07 Feb 2024
ஏமன்

இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த கப்பல் உட்பட 2 கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் 

ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவான ஏமனின் ஹூதிகள் செவ்வாயன்று செங்கடலில் இரண்டு கப்பல்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

07 Feb 2024
அமெரிக்கா

அமெரிக்காவில் இந்திய மாணவரை அடித்து நொறுக்கிய கும்பல்: அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரி கடிதம் 

அமெரிக்காவின் சிகாகோவில் இந்திய மாணவர் ஒருவரை ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்கி அவரது செல்போனை கொள்ளையடித்துச் சென்றனர்.

06 Feb 2024
பிரிட்டன்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உடல்நிலை குறித்த தகவல் 

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் காவல் நிலையம் மீது தாக்குதல்: 10 போலீசார் பலி, 6 பேர் காயம்

பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கானில் உள்ள சோட்வான் காவல் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர்.

05 Feb 2024
மாலத்தீவு

நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருக்கிறார் மாலத்தீவின் 'இந்திய எதிர்ப்பு' அதிபர்: 2 கட்சிகள் புறக்கணிப்பு 

மாலத்தீவின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகியவை இன்று நடைபெறும் அதிபர் முகமது முய்சுவின் நாடாளுமன்ற உரையை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் புற்றுநோயால் 82 வயதில் காலமானார் 

நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப்(82) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழநதார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சில வாரங்களே ஆகும் நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

03 Feb 2024
பிரான்ஸ்

பாரிஸ் நகரத்தில் உள்ள பிரதான ரயில் நிலையத்தில் கத்திக்குத்து: 3 பேர் காயம் 

பாரிஸ் நகரத்தில் உள்ள பாரிஸ் கேர் டி லியோன் ரயில் நிலையத்தில் சனிக்கிழமையன்று கத்திக்குத்துத் தாக்குதலால் குறைந்தது மூன்று பேர் காயமடைந்தனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

03 Feb 2024
கனடா

கனடா நாட்டு தேர்தலில் இந்தியா தலையிட்டதாக கனேடிய உளவுத்துறை குற்றச்சாட்டு 

கனடா நாட்டின் தேர்தலில் இந்தியா தலையிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கனடாவின் மிக உயர்ந்த வெளிநாட்டு புலனாய்வு அமைப்பான கனேடிய பாதுகாப்பு புலனாய்வு சேவை, சமீபத்திய உளவுத்துறை அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது.

03 Feb 2024
அமெரிக்கா

சிரியா, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு குழுக்களின் 85 இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் 

ஜோர்டானில் உள்ள அமெரிக்கத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரானியப் படைகள் மற்றும் தெஹ்ரான் ஆதரவு போராளிக் குழுக்களுக்கு எதிராக வெள்ளிக்கிழமை அமெரிக்க இராணுவம் பதிலடி வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இதனால், 18 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தியா உதவியை நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தான் மாலத்தீவுக்கு ஆதரவளிப்பதாக உறுதி

பாகிஸ்தானின் தற்காலிக பிரதமர் அன்வார்-உல் ஹக் கக்கருக்கும், மாலத்தீவு ஜனாதிபதி முஹம்மத் முய்ஸூவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின் போது, 'திவாலான' பாகிஸ்தான் அரசு, மாலத்தீவின் அவசர வளர்ச்சித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார்.

02 Feb 2024
காசா

காசாவில் உள்ள மக்கள் பசியுடன் உள்ளனர்: ஐ.நா கவலை 

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழனன்று காசாவின் கடுமையான நிலைமைகளை மேற்கோள்காட்டி, மனிதாபிமான உதவிகள் அவர்களை எட்டா தூரத்திற்கு சென்று விடுமோ என அஞ்சுவதாக கவலை தெரிவித்தார்.

காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் எரிவாயு வெடித்ததில் இருவர் இறந்துள்ளனர், குறைந்தது 165 பேர் படுகாயம் காயமடைந்தனர்.

01 Feb 2024
அமெரிக்கா

H-1B, L-1 மற்றும் EB-5 விசாக்களுக்கான கட்டண உயர்வை அறிவித்தது அமெரிக்கா 

அமெரிக்காவிற்கு குடியேற விரும்பும் இந்தியர்கள் மத்தியில் பிரபலமான விசாக்களாக கருதப்படும் H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட புலம்பெயர்ந்தோர் அல்லாத விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா உயர்த்தியுள்ளது.

தோஷகானா வழக்கில் பாக்.,முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் அவர் மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை

தோஷகானா வழக்கில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனருமான இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பாக்,.நீதிமன்றம்.

31 Jan 2024
மாலத்தீவு

மாலத்தீவு பட்டப்பகலில் நடந்த கொடூரம்; அரசு வழக்கறிஞருக்கு கத்திக்குத்து

இன்று காலை, மாலத்தீவு அரசு வழக்கறிஞர் ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தி உள்ளனர்.