பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை
பாகிஸ்தானின் தேசிய தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களில் பெரும்பாலோர் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன், 106 நாடாளுமன்ற இடங்களில் 47 இல் வெற்றி பெற்றனர் என ஜியோ நியூஸ் தெரிவிக்கிறது. இதுவரை குறைந்தது 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)(பிஎம்எல்-என்) கட்சி, சுயேச்சை வேட்பாளர்களுடன் கூட்டணி அமைத்து பெரும்பான்மை அடையலாம். அதனை தொடர்ந்து ஆட்சி அமைக்கலாம். பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் இதுவரை மொத்தம் 57 இடங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைக்க ஒரு அரசியல் கட்சிக்கு தனிப்பெரும்பான்மையாக 133 இடங்கள் தேவை. முன்னதாக நேற்று, பாகிஸ்தானின் சட்டமன்றத்தில் உள்ள 265 இடங்களில், 264 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.
முன்னிலை வகிக்கும் இம்ரான் கான்
இதுவரை குறைந்தது 17 இடங்களில் வெற்றி பெற்றுள்ள முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்)(பிஎம்எல்-என்), சுயேச்சை வேட்பாளர்களுடன் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என ஷெரீப்பின் உதவியாளர் இஷாக் தார் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்ததாக ஜியோ செய்தி வெளியிட்டுள்ளது. 2013ல் அறுதிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்த அக்கட்சி, மற்றொரு வெற்றியை தனதாக்க முனைகிறது. மறுபுறம் சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான் கானின் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI), மற்றும் கொல்லப்பட்ட தலைவர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) ஆகிய கட்சிகளும் இத்தேர்தலை சந்தித்துள்ளனர். எனினும், பல இடங்களில் இம்ரான் கான் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிப்பதாகவும் கூறப்படுகிறது