NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ஷெஹ்பாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகவும், மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராகவும் தேர்வு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஷெஹ்பாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகவும், மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராகவும் தேர்வு
    எனினும், நேற்று வரை, கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன

    ஷெஹ்பாஸ் ஷெரீப் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் பிரதமராகவும், மரியம் நவாஸ் பஞ்சாப் முதல்வராகவும் தேர்வு

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 15, 2024
    10:26 am

    செய்தி முன்னோட்டம்

    இழுபறியில் இருந்த பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் ஒருவழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    பாகிஸ்தானை மீண்டும் வழிநடத்த ஷெஹ்பாஸ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    எனினும், நேற்று வரை, கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன என செய்திகள் கூறுகின்றன.

    ஷெபாஸ் ஷெரீப்பை அடுத்த பிரதமருக்கான கூட்டணி வேட்பாளராக அவரது மூத்த சகோதரர் நவாஸ் ஷெரீப் இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

    அதேபோல, பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக மரியம் நவாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    முன்னாள் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) இந்த தேர்வை ஆதரித்தது.

    ஆனால் அரசாங்கத்தில் சேர இன்னும் உறுதியளிக்கவில்லை. எனினும் அக்கட்சி வெளியில் இருந்து சிறுபான்மை அரசாங்கத்தை ஆதரிக்கும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    பாக்., தேர்தல்

    பாகிஸ்தானில் தொங்கு பாராளுமன்றம்?

    ஒரு எக்ஸ் இடுகையில், மரியம், தனது தந்தை ஒரு சிறுபான்மை கூட்டணி அரசாங்கத்தை நடத்த விரும்பவில்லை என்று கூறினார்.

    அவர்களின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சி 264 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 80 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

    ஆனால் பெரும்பான்மைக்கு மற்ற ஆறு கட்சிகள் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளன.

    PML-N மற்றும் PPP இரண்டிலும் உள்ள தலைவர்கள், அரசாங்கத்தை உருவாக்கும் முறைகள் குறித்து விவாதிக்க உள் குழுக்களை அமைத்துள்ளதாகவும், PPPயை நிர்வாகத்தில் இணைத்து அமைச்சரவை பதவிகளை தேர்வு செய்வது உள்ளிட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பிப்ரவரி 8 தேர்தலில் பாகிஸ்தானில் 47.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய 2018 இல் 52.1 சதவீத வாக்காளர்கள் வாக்களித்ததை விட குறைவாக இருந்தது

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பாகிஸ்தான்
    பிரதமர்

    சமீபத்திய

    அமேசானுக்குச் சொந்தமான Zoox, அமெரிக்காவில் அதன் ரோபோடாக்சிகளை திரும்ப பெறுகிறது; ஏன்? அமெரிக்கா
    உலகளாவில் wearables பிரிவில் Xiaomi முதலிடத்தில் உள்ளது, ஆப்பிளை விட முன்னிலை சியோமி
    எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பது உண்மையா? ஆரோக்கியம்
    டிரம்பின் வரி அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன்கள் அமெரிக்காவில் மலிவாக இருக்கும் அமெரிக்கா

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம் நிலநடுக்கம்
    முன்னாள் பிரதமருக்கு சாதகமாக தொகுதிகளை மறுவரையறை செய்ததாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு பாகிஸ்தான் ராணுவம்
    பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    பாகிஸ்தான் பெஷாவர் குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் குண்டுவெடிப்பு

    பிரதமர்

    கர்பாவிற்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் நடனமாடி கொண்டாடிய இந்தியர்கள் யுனெஸ்கோ
    கேள்வி கேட்க பணம் வாங்கிய விவகாரத்தில் எம்பி மஹுவா மொய்த்ரா டிஸ்மிஸ் திரிணாமுல் காங்கிரஸ்
    "ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு மற்றும் வாடகையால் கனடாவை விட்டு வெளியேறும் மக்கள் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025