பாகிஸ்தான் பிரதமர் வேட்பாளராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் பெயர் பரிந்துரைப்பு
பாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக, நவாஸ் ஷெரீப், தனது சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை பரிந்துரைத்துள்ளார். கிட்டத்தட்ட ஒரு வாரமாக நீடித்த இழுபறி நிலையை முடிவுக்கு கொண்டு வர, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தனது சகோதரர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் வேட்பாளராக நியமித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ஷெஹ்பாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ்(PML-N) கட்சியின் முக்கிய தலைவர் ஆவர். பாகிஸ்தான் மக்கள் கட்சி(PPP), நேற்று (13-பிப்ரவரி) அன்று, ஷெரீப்பின் கட்சி சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிப்பதாகக் கூறியது. நடந்து முடிந்த தேர்தலில், PML-N கட்சி 75 இடங்களை பெற்றுள்ளது. PPP, 54 இடங்களை பெற்றுள்ளது. இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து, 264 இடங்கள் கொண்ட சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை அடைந்துள்ளது.
பெரும்பான்மை பெற்றும் ஆட்சி அமைக்க முடியாத இம்ரான் கான் கட்சி
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவுடன் சுயேட்சை வேட்பாளர்கள் 101 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர். இம்ரான் கானும் தன்னுடைய கட்சி ஆட்சி அமைக்கும் என தெரிவித்திருந்தார். ஆனால் அவர்களால் தனி நபராக ஆட்சி அமைக்க முடியாது, காரணம், அவர்கள் ஒரு கட்சியாக இல்லாமல், தனி நபர்களாக போட்டியிட்டதால் என கூறப்படுகிறது. அதோடு, அக்கட்சி பெரும்பான்மை பெற, PML-N அல்லது PPP உடனான கூட்டணியை நிராகரித்துள்ளனர். இதுகுறித்து, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பூட்டோ சர்தாரி தெரிவித்த போது, PML-N அல்லது PPP உடனான நாங்கள் ஏற்பதாக இல்லை. அதனால் நாங்கள் எதிர்க்கட்சியாக அமர முடிவெடுத்துளோம். பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடிக்கு வழிவகுக்கும் புதிய தேர்தலை PPP விரும்பவில்லை எனவும் பூட்டோ சர்தாரி கூறினார்.