புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் வெளியிட்ட முதல் அறிக்கை
புற்றுநோய் கண்டறிதலுக்குப் பிறகு இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தனக்கு ஆதரவு மற்றும் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மருத்துவ நிபுணர்கள் மற்றும் புற்றுநோய் தொண்டு நிறுவனங்களின் கவனிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக பிரிட்டன் மன்னர் சார்லஸ் நன்றி தெரிவித்தார். அதோடு சார்லஸ் மன்னரின் மனைவி கமீலாவும், அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கடந்த திங்களன்று, பக்கிங்ஹாம் அரண்மனை, 75 வயதான இங்கிலாந்து அரசர் சார்லஸ், ஒரு வகையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது. இதற்கான சிகிச்சை பெறுவதற்காக அவர் சில அரசாங்க நிகழ்ச்சிகளை ஒத்திவைப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது. எனினும் பக்கிங்ஹாம் அரண்மனை அவரது உடல்நிலை குறித்து வேறு எந்த விவரங்களையும் வழங்கவில்லை. ஆனால் இது புரோஸ்டேட் புற்றுநோய் இல்லை என்று மட்டும் குறிப்பிட்டது.