புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் உடல்நிலை குறித்த தகவல்
செய்தி முன்னோட்டம்
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பக்கிங்ஹாம் அரண்மனை, திங்களன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "புரோஸ்டேட் விரிவாக்கத்திற்கான அறுவை சிகிச்சைக்குப் பிறகு, மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அது என்ன வகையான புற்றுநோய், அது எவ்வளவு நாள்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
அவரது வாழ்நாள் முழுவதும், மன்னர் சார்லஸ் பல்வேறு உடல்நல சவால்களை அனுபவித்துள்ளார்.
அது குறித்த தகவல்கள் அனைத்தையும் இப்போது பார்க்கலாம்.
புரோஸ்டேட் சோதனையை செய்ய அதிகமான ஆண்களை ஊக்குவிப்பதற்காக அவர் தனது புரோஸ்டேட் சிகிச்சையைப் பற்றி பகிரங்கமாக வெளியே சொன்னார்.
பிரிட்டன்
கொரோனா தொற்றினால் 3 முறை பாதிக்கப்பட்ட மன்னர் சார்ல்ஸ்
மூன்று முறை தடுப்பூசி போடப்பட்ட போதிலும், மன்னர் சார்லஸ் இரண்டு முறை COVID-19 நோயால் பாதிக்கப்பட்டார்.
2020இல் கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில், தடுப்பூசிகள் கிடைப்பதற்கு முன்பு அவர் ஸ்காட்லாந்தில் உள்ள பிர்காலில் தனிமைப்படுத்தப்பட்டார்.
மேலும், குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டது குறித்து பேசிய அவர் "அது விசித்திரமான, விரக்தியான மற்றும் துன்பகரமான" அனுபவம் என்று விவரித்தார்.
பிப்ரவரி 2022இல் அவர் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். ஆனால் அது விரைவாக குணமடைந்துவிட்டது.
ஒரு தீவிர போலோ வீரரான மன்னர் சார்ல்ஸுக்கு பல முறை காயம் ஏற்பட்டுள்ளது.
1980ஆம் ஆண்டில், போலோ போட்டியின் போது அவரது குதிரை அவரை தூக்கி எறிந்ததால் அவரது கன்னத்தில் ஆறு தையல்கள் போடப்பட்டன.