
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவு வேட்பாளர்கள் முன்னிலை: நவாஸ் ஷெரீப்பின் அடுத்த திட்டம்
செய்தி முன்னோட்டம்
தீவிரவாத தாக்குதல் மற்றும் பிற பிரச்சனைகளால் பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் தாமதமாகி இருக்கும் நிலையில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் ஆகிய இருவரும் தங்கள் கட்சிகள் தான் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்கள்.
வியாழனன்று நடந்த தேர்தலில் ஷெரீப்பின் கட்சி, தனி ஒரு கட்சியாக அதிக இடங்களை வென்றிருந்தாலும், அவரது கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறிவிட்டது.
ஆனால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் கட்சி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது ஆதரவாளர்கள் சுயேச்சையாகப் போட்டியிட்டு, ஒட்டுமொத்தமாக அதிக இடங்களைப் பெற்றனர்.
அதனால், தனது கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், கூட்டணி ஆட்சி அமைக்க மற்ற குழுக்களுடன் பேச உள்ளதாக ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்
பெரும்பாலான சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி
கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற்ற போது, தீவிரவாதிகளின் தாக்குதலால் 28 பேர் கொல்லப்பட்டனர்.
அதற்கு அடுத்த நாள், மொத்தம் உள்ள 265 தொகுதிகளில் முக்கால்வாசிக்கும் அதிகமான தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு, ஷெரீப் பிற கட்சியுடன் பேசி கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாகிஸ்தான் தேர்தலில் தொங்கு சபை ஏற்படலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளப் போராடி வரும் பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு பிரச்சனியாக இந்த தேர்தல் முடிவுகள் வந்துள்ளன.
வெளிவந்துள்ள தேர்தல் முடிவுகளின் படி, பெரும்பாலான சுயேட்சை வேட்பாளர்கள் தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் ஆவர்.