Page Loader
அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

எழுதியவர் Sindhuja SM
Feb 14, 2024
07:40 pm

செய்தி முன்னோட்டம்

அபுதாபியின் முதல் இந்து கோவிலை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இது அந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரியதாகும். 27 ஏக்கரில் பரப்பளவில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த BAPS இந்துக் கோயில், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள பிரதமர் மோடி, புதன்கிழமையன்று கத்தாருக்குச் செல்லவுள்ளார். இந்நிலையில், செவ்வாய்கிழமை நடைபெற்ற மெகா டயஸ்போரா நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைப் பாராட்டிய பிரதமர் மோடி, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தலைவர்கள் கூட்டத்தில் கோயிலுக்கு நிலம் வழங்க அப்போதைய பட்டத்து இளவரசர் ஒப்புக்கொண்டார் என்று கூறினார்.

ட்விட்டர் அஞ்சல்

அபுதாபியில் முதல் இந்து கோவில் திறப்பு