
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்: நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கூட்டணி அமைக்க வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி இடையே கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
மறுபுறம், முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆதரவுடன் சுயேச்சைகள் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளனர். அவர்களிடமும் நவாஸ் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு,"கூட்டத்தில், நாட்டின் ஒட்டுமொத்த நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் ஒத்துழைப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மைக்காக, இரு தலைவர்களும்அரசியல் ரீதியாக ஒத்துழைக்க ஒப்புக்கொண்டனர்." என்று நவாஸ் ஷெரீப்பின் கட்சி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்
ஆட்சியமைக்கவிருப்பது யார்?
நவாஸ் ஷெரீப்பின் PML(N) மற்றும் பிலாவல் பூட்டோ சர்தாரியின் PPP ஆகிய கட்சிகள் பாகிஸ்தான் தேர்தலில் முறையே, 75 மற்றும் 54 இடங்களைப் பெற்று இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளன.
அவை நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர ஒன்றிணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன.
இது குறித்து இரு கட்சிகளும் ஒரு அறிக்கையில் இந்த முடிவை அறிவித்தன. கூட்டணி குறித்து இன்று, திங்கட்கிழமை இறுதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்ற 101 சுயேச்சைகளில், 93 பேர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு ஆதரவு அளித்தனர்.
பாகிஸ்தானின் சிக்கலான தேர்தல் முறையின் கீழ் சுயேச்சை உறுப்பினர்கள் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.