Page Loader
நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் புற்றுநோயால் 82 வயதில் காலமானார் 

நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் புற்றுநோயால் 82 வயதில் காலமானார் 

எழுதியவர் Sindhuja SM
Feb 04, 2024
10:48 am

செய்தி முன்னோட்டம்

நமீபியாவின் ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப்(82) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனையில் உயிரிழநதார். அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு சில வாரங்களே ஆகும் நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்பு குறித்த செய்தி ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. கடந்த மாத இறுதியில் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதை தொடர்ந்து அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். வின்ட்ஹோக்கில் உள்ள லேடி பொஹம்பா மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். 2014 இல் பிரதமராக இருந்தபோது, ​​அவர் ப்ரோஸ்டேட் புற்றுநோயிலிருந்து தப்பி பிழைத்ததாக மக்களிடம் கூறினார். அதன் பிறகு, அதற்கு அடுத்த ஆண்டு ஜனாதிபதியானார்.

ட்விட்டர் அஞ்சல்

நமீபிய ஜனாதிபதி ஹேஜ் ஜிங்கோப் காலமானார்