உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
மாலத்தீவு அதிபர் முய்சு மீது ஊழல் குற்றச்சாட்டுகள்
2018 ஆம் ஆண்டு முதல் அதிபர் முகமது முய்சுவின் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் கசிந்ததைத் தொடர்ந்து, அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.
UNSCயின் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்ற எலான் மஸ்க்கின் கருத்துகளுக்கு அமெரிக்கா பதில்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் நிறுவனங்களில் சீர்திருத்தம் செய்ய அமெரிக்கா ஆதரவை வழங்கியுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் புதன்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
'என் மனைவிக்கு ஏதாவது நேர்ந்தால்...': பாக் ராணுவ தளபதிக்கு இம்ரான் கான் எச்சரிக்கை!
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் நிறுவனரும், தற்போது ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், தனது மனைவி புஷ்ரா பீபி சிறையில் அடைக்கப்பட்டதற்கு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் தான் நேரடியாகக் காரணம் என்று புதன்கிழமை குற்றம் சாட்டினார்.
தேசிய பாதுகாப்பு காரணமாக X-ஐ தற்காலிகமாக தடை செய்த பாகிஸ்தான்
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் புதன்கிழமையன்று தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சமூக ஊடக தளமான எக்ஸ்-ஐ தற்காலிகமாக முடக்க உத்தரவிட்டது.
வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுங்கள்: இந்தியா-பாக்.,அரசாங்கங்களுக்கு அமெரிக்கா வேண்டுகோள்
பயங்கரவாத எதிர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளுக்கு பதிலளித்த அமெரிக்கா, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா மற்றும் பாகிஸ்தானை ஊக்குவித்துள்ளது.
ஈரானுக்கு எதிரான பழிவாங்கும் திட்டத்தை இஸ்ரேல் இறுதி செய்துள்ளதாக தகவல்
தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலளிக்கும் விதமாக, ஈரான் மீது எதிர் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தனது பழிவாங்கும் திட்டத்தை இறுதி செய்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
சிட்னி தேவாலயத்தில் நடந்த கத்திக்குத்து ஒரு பயங்கரவாதச் செயல்: காவல்துறை
ஆஸ்திரேலியா: சிட்னியில் உள்ள அசிரிய தேவாலயத்தில் நடந்த ஆராதனையின் போது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்டது.
பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன
பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுக்கும் திட்டங்களின் ஒரு பகுதியாக, பாலியல் ரீதியான டீப்ஃபேக் படங்கள் இங்கிலாந்தில் குற்றமாக்கப்பட உள்ளன.
இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல்
நேற்று இஸ்ரேலின் இராணுவத் தலைவர், ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
சிட்னியில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்; தேவாலயத்தில் கத்தி குத்து, பலர் காயம்
ஆஸ்திரேலியாவின் சிட்னி வெஸ்டில் அமைந்துள்ள வேக்லியில் உள்ள தேவாலயத்தில் ஒரு பிரசங்கத்தின் போது தேவாலயத்தின் பிஷப் மற்றும் பலர் கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை விரைவில் சந்திக்க அனுமதி: ஈரான்
தெஹ்ரானால் கைப்பற்றப்பட்ட MSC ஏரிஸ் சரக்கு கப்பலில் உள்ள 17 இந்திய பணியாளர்களை சந்திக்க இந்திய அரசு அதிகாரிகளை விரைவில் ஈரான் அனுமதிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் குண்டு வீச்சிற்கு பின்னர் கடற்கரையில் விடுமுறையை கொண்டாட கிளம்பிய இஸ்ரேலிய மக்கள்
தற்கொலை ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகள் கொண்டு இஸ்ரேல் மீது ஈரான் பன்முகத் தாக்குதலை நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, இஸ்ரேலியர்கள் கடற்கரைகளில் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கனடாவில் 24 வயது இந்திய மாணவர் சுட்டுக் கொலை
கனடாவின் தெற்கு வான்கூவரில் இந்தியாவைச் சேர்ந்த 24 வயது மாணவர் ஒருவர் காருக்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது.
இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தியது ஈரான்: போர் பதட்டம் அதிகரிப்பு
சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை இன்று நடத்தியது.
17 இந்தியர்கள் உட்பட 25 பேர் சென்ற கப்பலை சிறைபிடித்தது ஈரான்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடற்கரையில் வைத்து 25 பணியாளர்கள் கொண்ட ஒரு கொள்கலன் கப்பலை ஈரானின் புரட்சிகர காவலர்கள் இன்று கைப்பற்றினர்.
5 பேர் கத்திக்குத்தால் பலி, ஒருவர் சுட்டுக் கொலை; சிட்னி மாலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
சிட்னியில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் சென்டரில் "பல்வேறு நபர்கள்" கத்தியால் குத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். 5 பேர் கத்தி குத்தால் உயிரிழந்ததாகவும், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இஸ்ரேலை தாக்க இருக்கும் ஈரான்: இஸ்ரேலுக்கு உதவ போர்க்கப்பல்களை அனுப்பியது அமெரிக்கா
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான், இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என இந்தியா அறிவுறுத்தல்
மறு அறிவிப்பு வரும் வரை ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு பயணம் செய்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் 48 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும்
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து
யுனைடெட் கிங்டமில் குடும்ப விசா மூலம் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி செய்வதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவை உயர்ந்துள்ளது.
பிற தாக்குதல்களுக்கு தயாராவதாக இஸ்ரேல் அறிவிப்பு: மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம்
காசாவில் இராணுவ நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில், மற்ற தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் எழுந்துள்ளது.
ஈரானுக்கான விமானங்களை ரத்து செய்தது லுஃப்தான்சா ஏர்லைன்ஸ்
ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான நிறுவனம் வியாழனன்று ஈரானுக்கான விமானங்களின் இடைநிறுத்தத்தை நீட்டிப்பதாக அறிவித்தது.
வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு: அந்நாட்டு கோடீஸ்வரருக்கு மரண தண்டனை அறிவிப்பு
வியட்நாம் நாட்டின் மிகப்பெரிய மோசடி வழக்கு தொடர்பாக, வியட்நாமிய ரியல் எஸ்டேட் அதிபரான ட்ரூங் மை லானுக்கு, ஹோ சி மின் நகரில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் இது: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், தனது நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள் காரணமாக முன்பை விட இப்போது போருக்குத் தயாராக வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார்.
கனடா தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தனர் கனேடிய அதிகாரிகள்
கனடாவின் கூட்டாட்சித் தேர்தல்களில் இந்தியா தலையிட்டதாக சமீபத்தில் குற்றசாட்டுகள் எழுந்தன.
1900 இல் பிறந்த உலகின் வயதான மனிதர் தங்கள் நாட்டில் இருப்பதாக பெரு அறிவிப்பு
ஹுவானுகோவின் மத்திய பெருவியன் பகுதியைச் சேர்ந்தவர் மார்செலினோ அபாட். இவருக்கு வயது 124 என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
கிழக்கு இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் இன்று 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
'காஷ்மீர் பிரச்சனை' குறித்து பேசிய பாகிஸ்தான்-சவூதி தலைவர்கள்
சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தானின் உயர்மட்ட தலைவர்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மெக்ஸிகோ, அமெரிக்காவில் தென்பட்ட முழு சூரிய கிரகணம்; வைரலாகும் புகைப்படங்கள்
இந்திய நேரப்படி, நேற்று நள்ளிரவு தென்பட்ட முழு சூரிய கிரகணத்தை 31.6 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.
இந்திய தேசியக்கொடியை அவமதித்ததற்கு மன்னிப்பு கோரினார் மாலத்தீவு அரசியல்வாதி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்து இழிவாக பேசிய மாலத்தீவு அரசியல்வாதியான மரியம் ஷியுனா, தற்போது இந்திய தேசியக்கொடியை அவமதித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: தென்மேற்கு ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது கழண்டு விழுந்த என்ஜின்
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது அதன் எஞ்சின் கழண்டு விழுவதை காட்டும் திகிலூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது.
தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
மனைவியின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, ஆற்றில் எறிந்த கொடூர கணவன்
இங்கிலாந்தில் 28 வயது இளைஞன் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவளது உடலை 224 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய ஆற்றில் வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கனடா தேர்தலில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றன: கனடா உளவு நிறுவனம்
2019,2021இல் நடந்த கனேடிய தேர்தல்களில் இந்தியாவும், பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் குற்றம் சாட்டுகிறது.