இஸ்ரேல் மீது ஈரான் 48 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தக்கூடும்
செய்தி முன்னோட்டம்
அடுத்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடித் தாக்குதலை நடத்த வாய்ப்புள்ளதாகவும், அதற்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
காசா பகுதியில் ஹமாஸுடன் போரில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஈரானுடன் மோத இஸ்ரேல் தயராகி வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போர் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கிறது.
இஸ்ரேல் மீதான நேரடித் தாக்குதலின் அரசியல் அபாயங்களை ஈரான் இன்னும் எடைபோடுவதாகக் கூறப்படுகிறது.
"தாக்குதல் திட்டங்களை உச்ச தலைவர் முன் உள்ளது. மேலும் அவர் இன்னும் அரசியல் ஆபத்தை எடைபோட்டு கொண்டிருக்கிறார்" என்று ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் ஆலோசகர் கூறினார்.
இஸ்ரேல்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம்
சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
ஆனால், ஏப்ரல் 1 தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் பென்டகன் இந்த தாக்குதலை இஸ்ரேல் செய்ததாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே போர் வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது.