
துபாயில் ஒரே நாளில் கொட்டித்தீர்த்த பேய் மழை; நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பு
செய்தி முன்னோட்டம்
துபாயில் நேற்று ஒரு நாளில், ஒரு வருடத்திற்கான மழை பெய்துள்ளது. இதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதைகள் வெள்ளத்தில் மூழ்கின.
இதனால் விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் மூடப்பட்டு விமான போக்குவரத்தும் சிலமணி நேரம் நிறுத்தப்பட்டது.
துபாய் நகரம் முழுவதும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெருங்கடலைப் போல காட்சியளிக்கிறது.
சாலைகளில் மழை நீர் ஆறுகளை போல ஓடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேற்று 12 மணி நேரத்தில் துபாய் விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 100 மிமீ மழையும், 24 மணி நேரத்தில் மொத்தம் 160மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சராசரியாக, துபாய் நகரம் ஒரு வருடத்தில் 88.9மிமீ மழையை மட்டுமே பதிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கனமழை
ஐக்கிய அரபு தேசங்களில் கொட்டிதீர்க்கும் மழை
நேற்று காலை, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (யுஏஇ) தேசிய வானிலை ஆய்வு மையம், துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா உள்ளிட்ட நாட்டின் பெரும் பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டது.
திடீர் வெள்ளம் காரணமாக நகரின் சில சாலைகளை தவிர்க்குமாறு துபாய் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஐக்கிய அரபு பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளிலும் கனமழை மற்றும் அதைத் தொடர்ந்து வெள்ளம் ஏற்பட்டது.
அண்டை நாடான ஓமானில், கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் 10 மாணவர்களும் அடங்குவர்.
ஏப்ரல் 14 அன்று அவர்கள் பயணித்த வாகனம் வெள்ளம் சூழ்ந்த பகுதியைக் கடக்க முயன்றபோது வலுவான நீரோட்டத்தால் அடித்துச் செல்லப்பட்டதில் கொல்லப்பட்டனர் என்று பிபிசி தெரிவித்துள்ளது.
embed
வெள்ளத்தில் மிதக்கும் வாகனங்கள்
I had been there for 5 years never seen such scenes #dubai #DubaiAirport #dubaiflood #DubaiFlooding #dubairain pic.twitter.com/9wVbjkPp7y— Syed Tayyab (@TayyabBinSabir) April 17, 2024
embed
துபாய் மெட்ரோ ஸ்டேஷனில் வெள்ளம்
Situation of Dubai Metro station after rain. Dubai did not consider heavy rain in construction.#dubairain #DubaiStorm pic.twitter.com/UFgtnNjgJ7— AmricyLahoreya (@AmricyLahoreya) April 16, 2024
embed
விமான ஓடுதளத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
Dubai is experiencing major flooding as 1.5 year's worth of rain just fell in a single day. Nearly 5 inches (127 mm) fell in 24 hours. pic.twitter.com/k1EwQRHb5I— Colin McCarthy (@US_Stormwatch) April 16, 2024