5 பேர் கத்திக்குத்தால் பலி, ஒருவர் சுட்டுக் கொலை; சிட்னி மாலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வெளியேற்றம்
சிட்னியில் உள்ள பரபரப்பான ஷாப்பிங் சென்டரில் "பல்வேறு நபர்கள்" கத்தியால் குத்தப்பட்டதாக ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர். 5 பேர் கத்தி குத்தால் உயிரிழந்ததாகவும், ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இன்று பிற்பகல் வெஸ்ட்ஃபீல்ட் போண்டி சந்திப்பு மால் வளாகத்தில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்தன. இதனால் அந்த வணிக வளாகம் பூட்டப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியை தவிர்க்குமாறு போலீசார் மக்களை வலியுறுத்தியுள்ளனர். மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு தாக்குதல்காரரை போலீஸார் சுட்டு கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதல் எதற்காக நடத்தப்பட்டது என்ற காரணம் இன்னும் தெரியவில்லை.
போலீஸ் சைரன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சத்தம் நிறைந்த ஷாப்பிங் சென்டர்
சம்பவ இடத்தில் பீதி நிலவியதாகவும், கடைக்காரர்கள் பாதுகாப்பை தேடி ஓடியதாகவும், போலீசார் அந்த பகுதியை பாதுகாக்க முயன்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பலர் ஒரு பல்பொருள் அங்காடியில் தஞ்சம் அடைந்தனர். அங்கு அவர்கள் சுமார் ஒரு மணி நேரம்பதுங்கி இருந்தனர். போலீஸ் சைரன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சத்தம் அந்த இடத்தில் நிரம்பி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு நபர் ஒரு பெரிய கத்தியுடன் ஷாப்பிங் சென்டரைச் சுற்றி ஓடுவதையும், காயமடைந்தவர்கள் தரையில் கிடப்பதையும் பாதுகாப்பு கேமரா காட்சிகளில் காட்டுகின்றன.