வீடியோ: தென்மேற்கு ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது கழண்டு விழுந்த என்ஜின்
சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் போயிங் 737 விமானம் புறப்படும் போது அதன் எஞ்சின் கழண்டு விழுவதை காட்டும் திகிலூட்டும் வீடியோ ஆன்லைனில் வெளிவந்துள்ளது. டென்வரில் இருந்து ஹூஸ்டனுக்குச் செல்லும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை காலை புறப்பட்டது. இந்நிலையில், விமானம் நேற்று புறப்படும் போது அந்த விமானத்தின் இயந்திரம் கழண்டு விழுவதை ல பயணிகள் மற்றும் பணியாளர்கள் கவனித்தனர். இதன் விளைவாக, அந்த விமானம் புறப்பட்ட 25 நிமிடங்களுக்குள், டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. என்ஜின் கவர் கழண்டு விழுந்த போது 'வெடிகுண்டு' வெடிப்பது போல் இருந்ததாக 150 பயணிகள் மற்றும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது பதிவான ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.