NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து

    குடும்ப விசா வருமானத் தேவையை 55% உயர்த்தியது இங்கிலாந்து

    எழுதியவர் Sindhuja SM
    Apr 12, 2024
    11:28 am

    செய்தி முன்னோட்டம்

    யுனைடெட் கிங்டமில் குடும்ப விசா மூலம் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி செய்வதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவை உயர்ந்துள்ளது.

    அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சம்பள வரம்புகளின்படி, விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 29,000(பிரிட்டிஷ் பவுண்டுகள்)ஆக இருந்தால் மட்டுமே அவர்கள் குடும்ப விசா பெற தகுதி பெறுவார்கள்.

    முன்பு, இதற்கான குறைந்தபட்ச ஆண்டு சம்பளம் 18,600ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, முன்பை விட குறைந்தபட்ச ஆண்டு சம்பள வரம்பு தற்போது 55% அதிகரித்துள்ளது.

    குடும்ப விசா சம்பள வரம்பை திறமையான தொழிலாளர் விசா சம்பள வரம்புக்கு ஏற்றது போல் மாற்றியமைக்க இந்த சம்பள வரம்பு உயர்வு அறிவிக்கப்பட்டது.

    ரிஷி சுனக் அரசாங்கம் கடந்த ஆண்டு சீரமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த உயர்வை அறிவித்தது.

    இங்கிலாந்து 

    சட்டப்பூர்வ இடம்பெயர்வைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை 

    "ஸ்பான்சர் செய்யும் குடும்ப உறுப்பினர் அல்லது விண்ணப்பதாரருடன் இணைந்து வேலை செய்வதற்கான அனுமதியுடன் UK இல் வசிப்பவராக இருந்தால், அவர்கள் இனி UK இல் குறைந்தபட்சம் ஆண்டு வருமானமாக GBP 29,000 பெற்றிருக்க வேண்டும். பிரத்தியேகமாக அல்லது குறைந்த வருமானம் கூடுதலாக இருந்தால் தான் சேமிப்புகள் உட்பட பல வழிகளில் தேவைகளைப் பூர்த்தி செய்யலாம். " என்று UK உள்துறை அலுவலகம் கூறியுள்ளது.

    சட்டப்பூர்வ இடம்பெயர்வைக் குறைப்பதற்காகவும், இங்கிலாந்துக்கு வருபவர்கள் அங்கு வரி செலுத்துவோருக்குச் சுமையை ஏற்படுத்தாததை உறுதிசெய்வதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    யுகே
    இங்கிலாந்து

    சமீபத்திய

    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 17) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    யுகே

    இறுதி சடங்குக்கு பதில் பார்ட்டி வைத்த பாட்டி உலகம்
    சட்டவிரோதமாக குடியேறியவர்கள் தஞ்சம் கோரி விண்ணப்பிக்க முடியாது: இங்கிலாந்து உலகம்
    காலிஸ்தான் ஆதரவாளர்கள் தேசிய கொடியை அவமதித்ததற்கு எதிராக சீக்கியர்கள் போராட்டம் இந்தியா
    காலிஸ்தான் ஆதரவாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் இந்தியா

    இங்கிலாந்து

    "இங்கிலாந்து தோற்றதற்கு காரணம் இதுதான்": சச்சின் டெண்டுல்கர் கருத்து கிரிக்கெட்
    இங்கிலாந்தில் ஒரே நாளில் ₹5.75 கோடி வசூல் செய்த லியோ லியோ
    தமிழகத்தில் மூன்று நாட்களில் ₹80 கோடி வசூல் செய்த லியோ லியோ
    இஸ்ரேல் சென்றார் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஹமாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025