
1900 இல் பிறந்த உலகின் வயதான மனிதர் தங்கள் நாட்டில் இருப்பதாக பெரு அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
ஹுவானுகோவின் மத்திய பெருவியன் பகுதியைச் சேர்ந்தவர் மார்செலினோ அபாட். இவருக்கு வயது 124 என்று அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.
பெரு அரசின் இந்த கூற்று உண்மை என நிரூபிக்கப்பட்டால், பெருவின் ஆண்டியன் மலைகள் நீண்ட ஆயுளுக்கான ரகசியத்தையும், உலகின் மிக வயதான நபரையும் கொண்டுள்ளது என கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிக்கும்.
"ஹுவானுகோவின் இயற்கையுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உள் அமைதியும், மார்சிலினோ அபாட் டோலண்டினோ அல்லது 'மஷிகோ'வின் ஆயுளுக்கு உதவுகிறது" என்று பெரு அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி அவர் தன்னுடைய 124வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
மார்சிலினோ அபாட் டோலண்டினோ கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க பெரு நாட்டின் அரசாங்கம் உதவுவதாக பெருவியன் அதிகாரிகள் கூறுயுள்ளனர்.
embed
உலகின் வயதான மனிதர்
#Peru has claimed that local resident Marcelino Abad from the central Peruvian region of Huanuco is 124, born in 1900; which would make him by a distance the oldest living person and even top the oldest ever independently verified human. pic.twitter.com/UWqIyKISNm— DD News (@DDNewslive) April 10, 2024 #Peru has claimed that local resident Marcelino Abad from the central Peruvian region of Huanuco is 124, born in 1900; which would make him by a distance the oldest living person and even top the oldest ever independently verified human. pic.twitter.com/UWqIyKISNm— DD News (@DDNewslive) April 10, 2024