இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் 3 மகன்கள் பலி
செய்தி முன்னோட்டம்
ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் காசா பகுதியில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய காசா பகுதியில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்று கொண்டிருந்த போது அமீர், ஹஸேம் மற்றும் முகமது ஆகிய ஹனியேவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்ட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அல் ஜசீரா சாட்டிலைட் சேனலுக்கு பேட்டி அளித்த இஸ்மாயில் ஹனியே, தனது நான்கு மகன்களில் மூன்று பேர் "ஜெருசலேம் மற்றும் அல்-அக்ஸா மசூதியை விடுவிக்கும் பாதையில் வீரமரணம் அடைந்தனர்" என்று கூறினார்.
ஹமாஸ்
"எங்களுடைய எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை": இஸ்மாயில் ஹனியே
"எங்களுடைய எதிரி பழிவாங்கும் மற்றும் கொலை உணர்ச்சியால் இயக்கப்படுகிறான். அவன் எந்த சட்டத்தையும் மதிப்பதில்லை" என்று இஸ்மாயில் ஹனியே மேலும் கூறியுள்ளார்.
"தலைவர்களின் குடும்பங்களை குறிவைப்பதன் மூலம், எங்கள் மக்களின் கோரிக்கைகளை கைவிட வைக்கலாம் என்று எங்கள் எதிரிகள் நம்புகிறார்கள். எனது மகன்களைக் குறிவைத்தால் ஹமாஸ் அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று நம்புகிறவர்கள் ஏமாளிகள்" என்று இஸ்மாயில் ஹனியே தெரிவித்துள்ளார்.
இஸ்மாயில் ஹனியே நாட்டில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு கத்தாரில் வாழ்ந்து வருகிறார்.
ஹனியே பூர்வீகமாக இருந்த காசா நகரில் உள்ள ஷாதி அகதிகள் முகாமிற்கு அருகே தான் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.