மனைவியின் உடலை 224 துண்டுகளாக வெட்டி, ஆற்றில் எறிந்த கொடூர கணவன்
இங்கிலாந்தில் 28 வயது இளைஞன் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, அவளது உடலை 224 துண்டுகளாக வெட்டி, பிளாஸ்டிக் பைகளில் சுற்றிய ஆற்றில் வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த நபர் தனது மனைவியை பலமுறை குத்தி கொலைசெய்து, பின்னர் அவரது உடலை வெட்டி ஆற்றில் இருந்ததை ஒப்புக்கொண்டதால், திங்கள்கிழமை(ஏப்ரல் 8) தண்டனை அறிவிக்கப்பட உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், 26 வயதான ஹாலி பிராம்லி என்ற பெண் காணாமல்போனதாக புகார் அளிக்கப்பட்டது. 8 நாட்களுக்கு பின்னர், மார்ச் 25, 2023 அன்று, அவரது உடலின் பாகங்கள் லிங்கன்ஷையரில் உள்ள விதம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டன. பெண்ணின் கணவர் நிக்கோலஸ் மெட்சன் அவரது ஜோசுவா ஹான்காக் என்பவருடன் சேர்ந்து சடலத்தை அப்புறப்படுத்தியுள்ளனர்.
சைக்கோ கணவன்
விசாரணையின் போது, ஹான்காக், மெட்சனின் நண்பர் என்பதும், கொலைக்குப் பிறகு, உடலின் பாகங்களை அப்புறப்படுத்த மெட்சன் பணம் கொடுத்தார் என்பதையும் ஹான்காக் ஒப்புக்கொண்டார் என்று பிபிசி தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், 2013, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளிலும் இதேபோல தனது காதலிகளுக்கு எதிராக கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்ட மெட்சன், தற்போது தனது மனைவியை எதற்காக கொன்றான் என்பதை தெரிவிக்கவில்லை. 2021இல் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி, லிங்கனில் வசித்தவரை, பிராம்லியை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார் மெட்சன் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தி டெய்லி மெயில் படி, மெட்சன், மனைவியை தண்டிக்க அவரின் செல்ல பிராணிகளை கொலை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
எப்படி சிக்கினார் கொலையாளி?
பிராம்லி குறித்து புகார் வந்ததும், லிங்கன்ஷையர் காவல்துறை மார்ச்-24, 2023 அந்த தம்பதியினரின் அபார்ட்மெண்டிற்கு விரைந்துள்ளனர். மெட்சன், அதிகாரிகளிடம் தன்னை தனது மனைவி கொடுமைப்படுத்தியதாகவும், முந்தைய வார இறுதியில் பிராம்லி தன்னைத் தாக்கியதாகவும் கூறினார். மேலும் அவரது மனைவி மார்ச்-19 அன்று உள்ளூர் மனநல உதவிக்குழுவுடன் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும் தெரிவித்துள்ளார். இருப்பினும், மார்ச்-25 அன்று, போலீசார் மீண்டும் வீட்டிற்குச் சென்றபோது, குளியல் தொட்டியில் இரத்தக்கறை படிந்த படுக்கைவிரிப்பு, பிரதான படுக்கையறையில் இருந்த கறைகள், சமையலறையில் ஒரு ரம்பம் மற்றும் அம்மோனியா மற்றும் ப்ளீச் ஆகியவற்றின் கடுமையான நெடியையும் அவர்கள் கவனித்தனர். வீடு மறுவடிவமைக்கப்பட்டு சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதை கவனித்த காவல்துறையினர், அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.