உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
06 Apr 2024
அமெரிக்கா240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம்
வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைத் தாக்கிய 4.8 ரிக்டர் அளவிலான அரிய நிலநடுக்கம், 240 ஆண்டுகளுக்கும் பின்னர் பதிவான வலுவான நிலநடுக்கம் ஆகும்.
06 Apr 2024
இஸ்ரேல்இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தயாராகி வரும் ஈரான்; அமெரிக்காவை தலையிட வேண்டாம் எனவும் வலியுறுத்தல்
சிரியாவில் உள்ள தனது தூதரகத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பதில் தாக்குதலுக்கு தயாராக இருப்பதாக யூத அரசை எச்சரித்துள்ள ஈரான், அமெரிக்காவை ஒதுங்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டது.
05 Apr 2024
காசாஇப்போதே செயல்படுங்கள் அல்லது....: காசா போர் தொடர்பாக இஸ்ரேல் பிரதமருக்கு அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் காசாவில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை எட்டுவதில் தாமதம் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
05 Apr 2024
அண்டார்டிகாஅண்டார்டிகாவில் ஆயிரக்கணக்கான பென்குயின்கள் இறப்பு; பறவைக் காய்ச்சலா என சந்தேகம்
கடந்த பிப்ரவரியில் அண்டார்டிகாவின் முதல் H5N1 வழக்கு பதிவாகியுள்ளது.
04 Apr 2024
நிலநடுக்கம்தைவான் நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
ஜப்பானின் ஃபுகுஷிமா பிராந்தியத்தில் உள்ள ஹோன்ஷுவின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் இன்று 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
04 Apr 2024
ஜப்பான்இந்தியா உட்பட பல நாடுகளின் சுற்றுப்பயணிகளுக்காக ஜப்பானில் இ-விசா சேவை அறிமுகம்
ஜப்பானில் குறுகிய கால சுற்றுலாவாசிகளுக்கு, இ-விசா அமைப்பு வழியாக மின்னணு விசாக்கள் (இ-விசாக்கள்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
03 Apr 2024
தைவான்தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
ஜப்பானின் யோனகுனி தீவில் இன்று காலை, (மார்ச் 3), 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
02 Apr 2024
பெஞ்சமின் நெதன்யாகுஇஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.
01 Apr 2024
இந்தியாபன்னூன் கொலை சதி: இந்தியா முழு ஒத்துழைப்பு அளித்ததாக அமெரிக்க தூதர் பாராட்டு
காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் கொலைச் சதியைக் குறிப்பிட்டு பேசிய அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, இந்திய அரசாங்கம் முழு ஒத்துழைப்பு அளித்ததாக பாராட்டினார்.
31 Mar 2024
இஸ்ரேல்இஸ்ரேல் பிரதமர் போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு: இஸ்ரேலில் பெரும் போராட்டம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர் நிறுத்தத்திற்கு தடையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
30 Mar 2024
பாகிஸ்தான்3 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் பிரதமரை நேரடியாக தொடர்பு கொண்டார் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்புடன் நேரடித் தொடர்பைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
29 Mar 2024
அமெரிக்காபால்டிமோர் பால விபத்து: கப்பலில் இருந்த இந்திய பணியாளர்களை கேலி செய்யும் 'இனவெறி' கார்ட்டூன் வெளியீடு
அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தில் கட்டுப்பாட்டை மீறிய ஒரு சரக்குக் கப்பல் மோதியதால் 6 பேர் உயிரிழந்ததாகக் கருதப்படுகிறது.
29 Mar 2024
டெல்லிஅரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அறிக்கையை வெளியிட்ட ஐநா சபை
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
28 Mar 2024
மாலத்தீவுதுருப்புக்களை திரும்பப் பெறுவது தொடர்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தை வெளியிட முடியாது: மாலத்தீவுகள்
மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை மாற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், துருப்புக்கள் திரும்பப் பெறுவது தொடர்பாக மாலே மற்றும் புதுடெல்லி இடையேயான ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிட மாட்டோம் என்று மாலத்தீவின் அரசாங்கம் கூறியதாக மாலத்தீவு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
27 Mar 2024
இங்கிலாந்துஇங்கிலாந்தில் 'இஸ்லாமோஃபோப்' என துன்புறுத்தப்படுவதாக இந்திய மாணவர் குற்றச்சாட்டு
லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின்(LSE) இந்திய மாணவரான சத்யம் சுரானா, இந்த ஆண்டு மாணவர் சங்கத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவர் குறிவைக்கப்பட்டு 'பாசிஸ்ட்' என்று அழைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.
27 Mar 2024
அமெரிக்காஅமெரிக்கா பாலம் விபத்து: மேடே அழைப்பு விடுத்த இந்திய குழுவினருக்கு நன்றி தெரிவித்த ஜோ பைடன்
பால்டிமோர் நகரில் உள்ள 2.57 கிமீ நீளமுள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம், கொள்கலன் கப்பலொன்றில் மோதியதில் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து காணாமல் போன ஆறு கட்டுமானத் தொழிலாளர்கள், இறந்துவிட்டதாக அனுமானிக்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
27 Mar 2024
கோவாகோவாவில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்
நேபாள மேயரின் மகளான ஆர்த்தி ஹமால் என்ற 36 வயது நேபாளப் பெண் கோவாவில் காணாமல் போனதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
26 Mar 2024
அமெரிக்காவீடியோ: கப்பல் மோதியதால் சரிந்து விழுந்த அமெரிக்காவின் பிரமாண்ட பாலம்
அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது கப்பல் மோதியதால் அது இடிந்து விழுந்ததாக மேரிலாந்து போக்குவரத்து ஆணையம்(MTA) இன்று அதிகாலை தெரிவித்துள்ளது.
26 Mar 2024
அமெரிக்காகாசா போர் நிறுத்தத்தை கோரும் ஐநா வாக்களிப்பில் இருந்து விலகியது அமெரிக்கா: இஸ்ரேல் காட்டம்
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் காசாவில் போர்நிறுத்தம் செய்வதற்கான தனது முதல் கோரிக்கையை திங்களன்று வெளியிட்டது.
25 Mar 2024
கேட் மிடில்டன்இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? இணையவாசிகள் மீண்டும் சந்தேகம்
இங்கிலாந்தின் இளவரசி கேட் மிடில்டன், புற்றுநோய்க்காக கீமோதெரபி செய்து வருவதாக கடந்த வாரம் ஒரு வீடியோ செய்தியில் அறிவித்து, அவர் உடல்நலன் பற்றிய பரவலான ஊகங்கள் மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
25 Mar 2024
ஐநா சபைகாசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை
25 Mar 2024
அயர்லாந்துஅயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.
25 Mar 2024
ரஷ்யாமாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று தீவிரவாதிகள்
கடந்த மார்ச் 23 அன்று, மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள ஒரு ஷாப்பிங் மால் மற்றும் இசை அரங்கில் தாக்குதல் நடத்தி, 133 பேரைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு நபர்களில் மூன்று பேர், தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
24 Mar 2024
ரஷ்யாமாஸ்கோ பயங்கரவாத தாக்குதலின் வீடியோவை பகிர்ந்தது இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு
மாஸ்கோவில் உள்ள க்ரோகஸ் சிட்டி ஹாலில் மார்ச் 23 அன்று நடத்தப்பட்ட தாக்குதலின் புகைப்படம் மற்றும் பாடிகேம் காட்சிகளை இஸ்லாமிய அரசு பயங்கரவாத குழு வெளியிட்டுள்ளது.
23 Mar 2024
ரஷ்யாமாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு
ரஷ்யா கச்சேரி அரங்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
23 Mar 2024
ரஷ்யாரஷ்ய தீவிரவாத தாக்குல்: 4 குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது
மாஸ்கோ கச்சேரி அரங்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 145 பேர் காயமடைந்தனர்.
23 Mar 2024
அமெரிக்காமாஸ்கோ தாக்குதல்: தீவிரவாத தாக்குதல் குறித்து முன்பே ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா
மாஸ்கோவில் ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்று மார்ச் மாதமே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் நிர்வாகத்தை எச்சரித்ததாக அமெரிக்கா வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
23 Mar 2024
ஐநா சபைபோருக்கு மத்தியில் எகிப்து-காசா எல்லைக்கு செல்கிறார் ஐ.நா தலைவர்
ஐக்கிய நாடுகள் சபையின்(ஐ.நா.) பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், காசா-எகிப்து எல்லைக்கு சனிக்கிழமை சென்று, போர்நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 Mar 2024
ரஷ்யாரஷ்யாவில் உள்ள கச்சேரி அரங்கில் பயங்கரவாத தாக்குதல்: 60 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்யா தலைநகரான மாஸ்கோவில் உள்ள ஒரு கச்சேரி அரங்கில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 60 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 115 பேர் காயமடைந்தனர்.
22 Mar 2024
கேட் மிடில்டன்கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்
வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது.
21 Mar 2024
அருணாச்சல பிரதேசம்அருணாச்சல பிரதேசத்தில் சீனா உரிமை கொண்டாடியதையடுத்து இந்தியாவிற்கு ஆதரவளித்த அமெரிக்கா
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை "சீனாவின் உள்ளார்ந்த பகுதி" என்று சீன ராணுவம் அழைத்ததையடுத்து, இந்தியப் பிரதேசமாக வாஷிங்டன் அங்கீகரித்ததாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
20 Mar 2024
பாகிஸ்தான்பாகிஸ்தான் குவாதர் துறைமுகத்தில் திடீர் தாக்குதல்: 2 தீவிரவாதிகள் பலி
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இன்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
20 Mar 2024
அமெரிக்காஅமெரிக்காவில் காணாமல் போன இந்திய மாணவர்: ஹைதராபாத்தில் உள்ள பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டல்
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர் ஒருவர் காணாமல் போனதையடுத்து, அவரது பெற்றோருக்கு கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் அழைப்பு வந்துள்ளது.
19 Mar 2024
அமெரிக்கா"குடியுரிமை சட்டம் இந்திய முஸ்லீம்களை எப்படி பாதிக்க போகிறதோ': அமெரிக்கா செனட்டர் கவலை
குடியுரிமை திருத்த சட்டம், 2019ஐ(CAA) அமல்படுத்துவதற்கான விதிகளை இந்திய அரசாங்கம் அறிவிக்க இருக்கும் நிலையில், அது குறித்து அமெரிக்க செனட்டர் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
18 Mar 2024
மாலத்தீவுமாலத்தீவின் தேர்தல் வாக்கு சாவடிகள் இந்தியாவிலும் அமைக்கப்படும்
நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இந்தியா, இலங்கை மற்றும் மலேசியாவில் சேமிக்கப்படும் என்று மார்ச் 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலைத்தீவுகளின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
18 Mar 2024
பாகிஸ்தான்ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் திடீர் தாக்குதல்: 3 குழந்தைகள் உட்பட 6 பேர் பலி
பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்திலும், கோஸ்ட் மாகாணத்தில் உள்ள செபரா மாவட்டத்தின் ஆப்கானிஸ்தான் துபாய் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவ விமானங்கள் வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
18 Mar 2024
ரஷ்யாமூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Mar 2024
இங்கிலாந்துஉடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் விரைவில் பொதுமக்களிடம் உரையாற்றுவார் எனத்தகவல்
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன், ஜனவரி மாதம் நடந்த ஒரு வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் பொது வெளியில் காணப்படவில்லை.
18 Mar 2024
விளாடிமிர் புடின்ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்
விளாடிமிர் புடின், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் தேர்தலில், இமாலய வெற்றிபெற்று தன்னுடைய அதிபர் பதவியை மீண்டும் தொடரவுள்ளார்.
17 Mar 2024
அமெரிக்கா'அதிபர் தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமெரிக்கா ரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும்': டொனால்ட் டிரம்ப் பேச்சு
வரவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் தோல்வியடைந்தால் நாட்டில் இரத்தக்களரி ஏற்படும் என முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.