கோவாவில் தியான பயிற்சியில் ஈடுபட்டிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்
நேபாள மேயரின் மகளான ஆர்த்தி ஹமால் என்ற 36 வயது நேபாளப் பெண் கோவாவில் காணாமல் போனதாக அவரது தந்தை தெரிவித்துள்ளார். ஓஷோ தியானத்தைப் பின்பற்றும் அந்த பெண், கடந்த சில மாதங்களாக கோவாவில் தங்கியிருந்தார். ஆரத்தி கடைசியாக திங்கள்கிழமை இரவு 9.30 மணியளவில் அஷ்வெம் பாலத்தின் அருகே காணப்பட்டார். அவர் கடந்த சில மாதங்களாக ஓஷோ தியான மையத்துடன் இணைந்து தியான பயிற்சி மேற்கொண்டிருந்தார் என்று நேபாள செய்தித்தாள் தி ஹிமாலயன் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நேபாளத்தின் தங்காதி துணை பெருநகரத்தின் மேயர் கோபால் ஹமால், தனது மூத்த மகளைக் கண்டுபிடிக்க சமூக ஊடகங்களில் உதவி கோரியுள்ளார். ஆர்த்தி காணாமல் போனதை அவரது தோழி, கோபால் குடும்பத்தினருக்கு தெரிவித்ததாக கோபால் மேலும் கூறினார்.
மகளை தேடுவதற்கு உள்ளூர் வாசிகளின் உதவியை நாடும் நேபாள மேயர்
"என் மூத்த மகள் ஆர்த்தி, கோவாவில் சில மாதங்களாக ஓஷோ தியானம் செய்து வருகிறார். ஆனால், நேற்று முதல் ஆர்த்தி, ஜோர்பா வைப்ஸ் அஷ்வெம் ப்ரீஸ் உடனான தொடர்பை இழந்துவிட்டதாக அவரது தோழியிடம் இருந்து செய்தி வந்துள்ளது. கோவாவில் வசிப்பவர்கள் எனது மகள் ஆர்த்தியைத் தேடுவதற்கு உதவ வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்." என்று மேயர் கோபால் ஹமால் ட்வீட் செய்துள்ளார். மேலும்,"எனது இளைய மகள் அர்சூவும், மருமகனும், எங்கள் மூத்த மகள் ஆர்த்தியைத் தேடுவதற்காக இன்று இரவு கோவாவுக்குப் பறக்கிறார்கள்,"என்று அவர் மேலும் கூறினார். "எனது மகளைத் தேடுவதற்குத் தேவையான உதவிகளை வழங்க, 9794096014/8273538132/ 9389607953 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று நேபாள மேயரின் எக்ஸ் பதிவு குறிப்பிடுகிறது.