Page Loader
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு

மாஸ்கோ பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு

எழுதியவர் Sindhuja SM
Mar 23, 2024
06:14 pm

செய்தி முன்னோட்டம்

ரஷ்யா கச்சேரி அரங்கில் நடந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில், 60 பேர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அவசர சேவைகள் இடிபாடுகளை அகற்றியபோது, ​​​​மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் இந்த தாக்குதல் நடந்தது. அங்கு ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் பொது மக்களை துப்பாக்கி சூடு நடத்தினர். இஸ்லாமிய அரசு குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. எங்களது போராளிகள் மாஸ்கோவின் புறநகரில் ஒரு பெரிய கூட்டத்தை தாக்கினர் என்றும், மேலும் அவர்கள் பத்திரமாக தங்கள் தளங்களுக்கு திரும்பினர் என்றும் இஸ்லாமிய அரசு குழு தெரிவித்துள்ளது.

ரஷ்யா 

நேரடி தொடர்புடைய நான்கு பயங்கரவாதிகள் கைது 

தாக்குதல் நடந்த இடத்தில் மேலும் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இறப்பு எண்ணிக்கை 115 ஐ எட்டியது என்று விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. 186 குழந்தைகள் உட்பட 334 பேரை காவு வாங்கிய 2004 பெஸ்லான் பள்ளி தாக்குதலுக்கு பிறகு, ரஷ்யாவில் நடக்கும் மிகப்பெரும் தாக்குதல் இதுவாகும். "இந்த தாக்குதல் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் இருக்கும் நான்கு பயங்கரவாதிகளுக்கு இந்த சம்பவத்துடன் நேரடி தொடர்பு இருக்கிறது என்றும் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) இயக்குனர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ், அதிபர் புதினிடம் தெரிவித்துள்ளார்" என்ற அறிக்கையை ரஷ்ய அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு அதிபர் புடதின் சட்ட அமலாக்கம் மற்றும் அவசர சேவைகளுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக கூறப்படுகிறது.