மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை
ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டால், மூன்றாம் உலகப் போர் மூழும் என்று ரஷ்ய அதிபர் புதின் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர், முதன்முறையாக மேற்கத்திய நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் கடுமையாக சிதைந்துள்ளன. அணு ஆயுதப் போரின் அபாயங்கள் குறித்து புதின் அடிக்கடி எச்சரிப்பது வழக்கம், ஆனால் உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் தங்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் பேசிய பிரஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன், வருங்காலத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக தனது நாட்டு படைகளை அனுப்பக்கூடும் என்று கூறினார். பல மேற்கத்திய நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன. கிழக்கு ஐரோப்ப நாடுகள் மட்டும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
ஏற்கனவே உக்ரைனில் அமெரிக்க வீர்கள் உள்ளனர்
மக்ரோனின் கருத்துக்கள் மற்றும் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான மோதலின் அபாயங்கள் மற்றும் சாத்தியக்கூறுகள் குறித்து ரஷ்ய அதிபரிடம் கேட்கபட்டது. அதற்கு பதிலளித்த அவர், "நவீன உலகில் எல்லாம் சாத்தியம்" என்று கேலி செய்தார். "முழு அளவிலான மூன்றாம் உலகப் போரில் இருந்து நாம் வெகு தொலைவில் இல்லை என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் யாருக்கும் அதைப்பற்றி கவலை இல்லை" என்று புதின் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், அமெரிக்க நேட்டோ இராணுவ வீரர்கள் ஏற்கனவே உக்ரைனில் இருக்கின்றனர் என்றும், போர்க்களத்தில் ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு பேசும் வீரர்களும் இருக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.