அயர்லாந்தின் இளம் பிரதமராக சைமன் ஹாரிஸ் பதவியேற்க உள்ளார்
ஞாயிற்றுக்கிழமை மைய-வலது ஃபைன் கேல் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட சைமன் ஹாரிஸ், அயர்லாந்தின் மிக இளைய பிரதமராகப் பதவியேற்க உள்ளார். சைமன் ஹாரிஸ் சமூக ஊடகத்தில் பிரபலமான முகமாக இருப்பதால், தேர்தல் வரும்போது அது தனது கட்சியின் வெற்றியை காப்பாற்றும் என்று நம்புகிறார். அதற்கு முன்னர் 2017இல் இளம் வயது ஐயர்லாந்து பிரதமர் என சாதனை படைத்த 38 வயதான லியோ வரத்கரை விட குறைந்த வயது பிரதமர் என சாதனை புரிந்துள்ளார்,சைமன் ஹாரிஸ். வரத்கரின் ராஜினாமாவை தொடர்ந்து, ஹாரிஸ், மைய-வலது ஃபைன் கேல் கட்சியை வழிநடத்தும் பிரதமர் வேட்பாளராக ஆனார். வியாழன் அன்று நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில், அவர் பெரும்பான்மையான ஒப்புதல்களைப் பெற்றார். தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை அவரது பதவியேற்பு உறுதி செய்யப்பட்டது.