NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
    இது சார்ந்த சட்டம் ஒன்று, நேற்று இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது

    இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி

    எழுதியவர் Venkatalakshmi V
    Apr 02, 2024
    12:04 pm

    செய்தி முன்னோட்டம்

    இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.

    மேலும் அது ஒரு "பயங்கரவாத சேனல்" என்று குறிப்பிட்டு, அது பயங்கரவாதத்தை பரப்புகிறது எனவும் கூறினார்.

    இது சார்ந்த சட்டம் ஒன்று, நேற்று இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட போது பெஞ்சமின் இதனை தெரிவித்தார்.

    நெதன்யாகுவின் இந்த உறுதிமொழி அல் ஜசீராவுக்கு எதிரான இஸ்ரேலின் நீண்டகால பகையை அதிகரித்துள்ளது.

    அதேநேரத்தில், காசா போரை நிறுத்துவதற்கான மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் தோஹா அரசாங்கத்துடன் பதட்ட உணர்வுகளையும் இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.

    காரணம், இந்த சேனலின் தலைமையகம் கத்தார் ஆகும்.

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை குறித்து கத்தாரோ அல்லது ஒளிபரப்பு நிறுவனமோ உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.

    கசந்த உறவு

    தொடரும் இறுக்கமான உறவு

    இஸ்ரேலுக்கு எதிராக நியாயமற்ற சார்பு இருப்பதாக குற்றம் சாட்டி, அல் ஜசீராவுடன் இஸ்ரேல் நீண்டகாலமாக ஒரு கசப்பான உறவைக் கொண்டுள்ளது.

    சில ஆண்டுகளுக்கு முன்னர், காசாவில் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலின் போது, அல் ஜசீரா நிருபர் ஷிரீன் அபு அக்லே கொல்லப்பட்டார். அவரை வேண்டுமென்றே கொன்றதாக இஸ்ரேல் மீது குற்றம் சாட்டியது, அல் ஜஸீரா சேனல்.

    இருப்பினும், இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டை மறுத்தது.

    ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் வெடித்ததைத் தொடர்ந்து அந்த உறவுகள் மேலும் மோசமடைந்தன.

    டிசம்பர் 2023இல், தெற்கு காசாவில் நடந்த போரைப் பற்றி அல் ஜசீரா ஒளிப்பதிவாளர் அறிக்கை செய்தபோது இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்டார். காசாவில் உள்ள சேனலின் பீரோ தலைவர் Wael Dahdouh அதே தாக்குதலில் காயமடைந்தார்.

    அல் ஜசீரா

    தொடர்ந்து குறிவைக்கப்பட்டனரா அல் ஜசீரா நிர்வாகத்தினர்?

    இதனைத்தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் நடந்த ஏவுகணை தாக்குதலில், தஹ்தூவின் மகனைக் கொன்றதாக இஸ்ரேல் மீது அல்-ஜசீரா குற்றம் சாட்டியது.

    ஹம்சா தஹ்துஹ் என பெயர் கொண்ட அவர், அல்-ஜசீராவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, ​​அவர் பயணித்த கார் மீது ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது.

    ஆனால், ஹம்சா தஹ்தூஹ், ஹமாஸுடன் இணைந்த தீவிரவாதக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத்தின் உறுப்பினர் என்று இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

    கடந்த அக்டோபரில் மற்றொரு தாக்குதலில் Wael Dahdouhஇன் மனைவி, மகள், மகன், அவரது பேரன் கொல்லப்பட்டனர்.

    தஹ்தூஹ், மருத்துவமனைக்குள் இறந்த தனது மகனின் உடலைப் பார்த்து கலங்கி நின்ற படங்களை அந்த சேனல் ஒளிபரப்பியது.

    அல்-ஜசீரா சேனல், போர் முழுவதும் காசாவில் தங்கியிருக்கும் சில சர்வதேச ஊடகங்களில் ஒன்றாகும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பெஞ்சமின் நெதன்யாகு
    இஸ்ரேல்
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    பெஞ்சமின் நெதன்யாகு

    நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்? இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம் ஹமாஸ்
    அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு காசா

    இஸ்ரேல்

    இஸ்ரேல் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளும் வரை பணயக்கைதிகளை மேலும் விடுவிக்க ஹமாஸ் மறுப்பு இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    குஜராத் பகுதியில் கப்பலை தாக்கிய ட்ரோன் ஈரானிலிருந்து ஏவப்பட்டது- அமெரிக்கா ஈரான்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம் ஜோ பைடன்
    இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடத்தில் எந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் இல்லை: வெறிச்சோடி கிடக்கும் பெத்லகேம் உலகம்

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ்
    காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல் இஸ்ரேல்
    பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல் இஸ்ரேல்
    ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025