பெஞ்சமின் நெதன்யாகு: செய்தி
டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு எதிராக 'ஃபத்வா' பிறப்பித்த ஈரானிய மதகுரு
ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு மத ஆணையை (ஃபத்வாவை) பிறப்பித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுயவை வெகுவாக பாராட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவர் மீது இருக்கும் தற்போதைய விசாரணை நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஈரான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது, போரில் உடன் நின்ற டிரம்பிற்கு நன்றி கூறிய நெதன்யாகு
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் ஈரானுடனான போர் நிறுத்த திட்டத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளது.
ஈரான் மீது இந்த வார இறுதியில் தாக்குதல் நடத்த அமெரிக்கா தயாராகி வருகிறது
ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் வரும் நாட்களில் ஈரான் மீது இராணுவத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றனர்.
டிரம்பைக் கொல்ல ஈரான் சதி, அவரை முதல் எதிரியாக கருதுகிறது: இஸ்ரேல் பிரதமர் பகீர் குற்றச்சாட்டு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில், ஈரான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தனது அணுசக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாகக் கருதுவதால் அவரைக் கொல்ல முயற்சிப்பதாகக் கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் மோதலால் பதற்றம் அதிகரிப்பு; பிரதமர் மோடிக்கு போன் போட்டு விளக்கம் அளித்த பெஞ்சமின் நெதன்யாகு
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்திற்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொலைபேசியில் அழைத்து விளக்கம் அளித்துள்ளார்.
ஈரான் மீது விமான தாக்குதல் நடத்திய இஸ்ரேல்; தலைநகர் தெஹ்ரானில் குண்டுவெடிப்புகள்
இஸ்ரேலிய விமானப்படை ஈரானுக்குள் ஒரு தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கு பகுதிகளில் மேலும் பதட்டங்களை அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸின் காசா தலைவர் பலி; பெஞ்சமின் நெதன்யாகு தகவல்
ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வாரின் இளைய சகோதரரும், ஹமாஸ் மூத்த தளபதியுமான முகமது சின்வார் இறந்ததை இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தியுள்ளார்.
ஹமாஸ் சனிக்கிழமைக்குள் பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் காசா போர்நிறுத்தம் முடிவுக்கு வரும்: நெதன்யாகு
சனிக்கிழமை நண்பகலுக்குள் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால், காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
அருகில் நெதன்யாகு இருக்கையிலே அமெரிக்கா காசாவைக் கைப்பற்றும் என சூளுரைத்த டொனால்ட் டிரம்ப்
பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்பட்ட பிறகு, போரினால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசமான காசா பகுதியை தனது நாடு கையகப்படுத்தும் என்றும், அதை "அபிவிருத்தி செய்யும்" என்றும், "அதை சொந்தமாக்கிக் கொள்ளும்" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை தெரிவித்தார்.
மார்ச் மாதம் மீண்டும் ஹமாஸுக்கு எதிராக போரை தொடங்க வேண்டும்; இஸ்ரேல் பிரதமருக்கு நெருக்கடி
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது தீவிர வலதுசாரி கூட்டாளிகளின் தீவிர அழுத்தத்தை எதிர்கொண்டு வருவதால், காசா போர்நிறுத்தத்தின் முதல் கட்ட முடிவைத் தொடர்ந்து ஹமாஸுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கடைசி நிமிட சிக்கலுக்குப் பிறகு பிணைக் கைதிகள் விடுதலை ஒப்பந்தம் எட்டப்பட்டது: இஸ்ரேல் பிரதமர் உறுதி
காசா பகுதியில் பிணைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஹமாஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
இன்று முதல் அமலுக்கு வருகிறது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்!
செவ்வாயன்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்தது.
போர் குற்றச்சாட்டுக்கு எதிராக ICC பிறப்பித்த பிடி வாரென்ட் உத்தரவு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மை: நெதன்யாகு
'என் மீது சுமத்திய போர் குற்றச்சாட்டுக்கு, யூதர்களுக்கு எதிரான மனப்பான்மையே காரணம். இதற்கு தக்க பதிலடி அளிக்கப்படும்' என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது ICC
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது டெய்ஃப் ஆகியோருக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
பேஜர் தாக்குதல்களை செய்தது நாங்கள் தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹெஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார்.
நம்பிக்கையிழந்த காரணத்தால் பாதுகாப்பு அமைச்சரை பதவியிலிருந்து துரத்திய இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, நாட்டின் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளை கையாள்வதில் நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி, தனது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்டை பதவி நீக்கம் செய்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத்திற்கு உலகில் இடமில்லை: நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி பேச்சு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார்.
ரஃபா தாக்குதலில் 45 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தவறு நடந்ததாக ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 45 இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதை அடுத்து, "அது துயரகரமான தவறு" என ஒப்புக்கொண்டார்.
பாலஸ்தீனத்தை அங்கீகரித்த 3 நாடுகள்: 'பயங்கரவாதத்திற்கு வெகுமதி' என நெதன்யாகு கொந்தளிப்பு
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்பதற்கான நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்தின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அவர்களின் முடிவுகள் "பயங்கரவாதத்திற்கு வெகுமதி" வழங்குவதற்கு ஒப்பானது என்று கூறினார்.
இஸ்ரேலில் 'பயங்கரவாத சேனல்' அல் ஜசீராவை மூடுவதாக பெஞ்சமின் நெதன்யாகு உறுதி
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு திங்களன்று தனது நாட்டில் அல் ஜசீராவின் செயல்பாடுகளை மூடுவதாக உறுதியளித்தார்.
காசா-எகிப்து எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்- நெதன்யாகு
காசா பகுதிக்கும் எகிப்துக்கும் இடையிலான எல்லைப் பகுதி இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலி; பொதுமக்களைப் பாதுகாக்க பைடன் அழுத்தம்
காசாவில் இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த 24 மணி நேரத்தில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட நிலையில், அங்குள்ள பொதுமக்களை பாதுகாக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பிரதமருக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
காசா போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர நெதன்யாகுவிடம் மோடி வலியுறுத்தல்
காசா மீதான இஸ்ரேல் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவும், நிவாரண உதவிகளை அதிகரிக்கவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான தொலைபேசி உரையாடலில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்
காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.
காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்
காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில், "அச்சுறுத்தல்" என்று தவறாகக் கருதி மூன்று பணயக் கைதிகளை அதன் படைகள் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை
ஹமாஸுக்கு எதிரான அதன் "கண்மூடித்தனமான" தாக்குதலால், காசா மீதான போரில் உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.
"ஹமாஸின் முடிவின் ஆரம்பம்"- போராளிகளை சரணடைய வலியுறுத்தும் இஸ்ரேல் பிரதமர்
ஹமாஸ் போராளிகளை ஆயுதங்களை கைவிடுமாறு வலியுறுத்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அந்த அமைப்பு அதன் முடிவை நெருங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை நெருங்கும் இஸ்ரேல்
தெற்கு காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிர்படுத்தி உள்ள நிலையில், அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்ட ஹமாஸ் நிறுவனர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் கஃபர் அஸ்ஸா பகுதியை பார்வையிட்டனர்.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்
திட்டமிட்டபடி இன்று காலை உள்ளூர் நேரப்படி 10:00 மணி அளவில் போர் நிறுத்தம் நடைபெறாததால், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருகிறது.
இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம்
வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவில் குழந்தைகள் கொல்லப்படுவதாக குற்றம் சாட்டிய ட்ரூடோ, பதிலளித்த நெதன்யாகு
காசாவில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதிலளித்துள்ளார்.
அல்-ஷிஃபா ஊழியர்கள் எரிபொருள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு
ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அனுப்பிய எரிபொருளை, மருத்துவமனை ஊழியர்கள் பெறுவதை ஹமாஸ் தடுப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து நெதன்யாகு சூசகம்
காசாவில் ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான சாத்தியமான ஒப்பந்தம் குறித்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூசகமாக தெரிவித்துள்ளார்.
போர் இடைநிறுத்தத்திற்கு ஒகே, ஆனால் நிறுத்தத்திற்கு நோ சொன்ன இஸ்ரேல்
காசா பகுதிக்கு நிவாரண உதவிகள் செல்வதற்காகவும், அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் வெளியேறுவதற்காகவும், போரில் தினசரி 4 மணி நேரம் இடைநிறுத்தம் செய்ய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு ஒப்புதல் அளித்துள்ளார்.
நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்?
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இன்று காசாவில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க, தரைவழி பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது.