
இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம்
செய்தி முன்னோட்டம்
வடக்கு காசா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 12 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் நடத்தும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
"இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் இந்தோனேசிய மருத்துவமனை மீது நடத்திய தாக்குதலில், நோயாளிகள், அவர்கள் உடன் வந்தவர்கள் உட்பட 12 கொல்லப்பட்டனர்."
"மேலும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்" என சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் அல் குத்ரா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் சார்பில், இந்த குற்றச்சாட்டிற்கு எந்தவித உடனடி எதிர்வினையும் வரவில்லை.
அல் ஜசீரா தொலைக்காட்சி வெளியிட்டிருந்த காணொளியில், மருத்துவமனை உள்ள பகுதியில் இஸ்ரேல் டேங்குகள், ஹமாஸ் போராளிகளுடன் கடுமையாக சண்டையிடுவதை பார்க்க முடிந்தது.
2nd card
அல் ஷிஃபா மருத்துவமனைக்கு கீழ் பதுங்கு குழி
ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியின் மிகப் பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையை, ஹமாஸ் கட்டுப்பாட்டு மற்றும் கட்டளை மையமாக பயன்படுத்தி வருவதாக, போர் தொடங்கியது முதல் இஸ்ரேல் கூறி வருகிறது.
கடந்த வாரம் அமெரிக்காவும், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பினர், மருத்துவமனையின் கீழ் உள்ள பதுங்கு குழிகளை கட்டளை மையமாக பயன்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக கூறியிருந்தது.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், அல் ஷிஃபாவிற்கு கீழே 55 மீட்டர் நீள சுரங்கத்தை கண்டறிந்துள்ளதாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
"மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏராளமான கட்டிடங்களை பயங்கரவாத நடவடிக்கைகளை மறைப்பதற்காக ஹமாஸ் பயன்படுத்துகிறது என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது" என இஸ்ரேல் கூறியுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
மருத்துவமனைக்கு கீழ் பதுங்கு குழிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் இருப்பதாக, இஸ்ரேல் வெளியிட்டுள்ள வீடியோ
LIVE: Operational update with Lt. Col. Amnon Shefler
— Israel Defense Forces (@IDF) November 20, 2023
https://t.co/AG7xA5HsBa
4th card
செங்கடலில் ஜப்பான் கப்பலை கைப்பற்றிய ஹூதி போராளிகள்
கடந்த 45 நாட்களாக நடந்து வரும் போரில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும், ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹூதி போராளிகள், செங்கடலில் ஜப்பான் நாட்டு சரக்கு கப்பலை கடத்தியுள்ளனர்.
அந்த கப்பல் இஸ்ரேல் உடையது என ஹூதி போராளிகள் கூறிவரும் நிலையில், சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, அது தன் நாட்டை சேர்ந்த 'நிப்பான் யூசென்' நிறுவனத்திற்கு சொந்தமானது என ஜப்பான் உறுதி செய்துள்ளது.
இந்த கடத்தலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சர்வதேச கப்பல் மீது ஈரான் தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.
5th card
தெற்கு காசாவில் ரஃபா பகுதியிலும் மருத்துவமனை அருகில் தாக்குதல்
தெற்கு காசாவில் உள்ள ரஃபா பகுதியில் செயல்பட்டு வரும் அபு யூசுப் அல்-நஜ்ஜார் மருத்துவமனைக்கு அருகில், நடைபெற்ற தாக்குதலில் 15 நபர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய ஊடகம் தெரிவித்துள்ளது.
மேலும், சில டஜன் கணக்கானோர் காயம் அடைந்திருப்பதாக, வஃபா (அதிகாரப்பூர்வ பாலஸ்தீனிய செய்தி நிறுவனம்) செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதல் குறித்து, இதுவரை தகவல் வெளியிடாத இஸ்ரேல், காசா பகுதி முழுவதும் தீவிரவாத கட்டமைப்புகளை களை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.