பேஜர் தாக்குதல்களை செய்தது நாங்கள் தான்: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
செப்டம்பர் மாதம் லெபனானை தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஹெஸ்பொல்லாவின் மறைவிடங்கள் மீதான பேஜர் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார். "லெபனானில் பேஜர் நடவடிக்கைக்கு பச்சைக்கொடி காட்டியதை நெதன்யாகு ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினார்" என்று நெதன்யாகுவின் செய்தித் தொடர்பாளர் ஓமர் டோஸ்ட்ரி AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். நவம்பர் 10, ஞாயிறு அன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், இஸ்ரேலியப் படைகள் பெய்ரூட்டில் ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தியதாகவும், ஹெஸ்பொல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவைக் கொன்றதாகவும் நெதன்யாகு ஒப்புக்கொண்டார்.
ஹிஸ்பொல்லா பயன்படுத்தும் பேஜர் மற்றும் வாக்கி தாக்கி வெடித்து பலர் உயிரிழந்தனர்
இந்த ஆண்டு செப்டம்பர் 17 மற்றும் 18 க்கு இடையில், ஈரான் ஆதரவு பயங்கரவாதக் குழுவான ஹெஸ்புல்லாவால் பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வாக்கி-டாக்கிகள் வெடித்து, சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 3,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆதாரங்களின்படி, ஜிபிஎஸ் திறன்கள் இல்லாத, மைக்ரோஃபோன்கள் மற்றும் கேமராக்கள் இல்லாத, ஹெஸ்பொல்லா உறுப்பினர்கள் பயன்படுத்தும் பேஜர்கள் இஸ்ரேலிய கண்காணிப்பைத் தவிர்க்கும் வகையில் இருந்தன. இஸ்ரேலிய நடவடிக்கையில், பேஜர்கள் லெபனான் முழுவதும் 30 நிமிடங்களுக்குள் வெடித்தது. லெபனானில் இஸ்ரேலின் நடவடிக்கை மற்றும் ஹெஸ்பொல்லா தலைவர் கொல்லப்பட்ட பிறகு, ஈரான் யூத தேசத்தின் மீது ஏவுகணைகளை சரமாரியாக தாக்கியது, இராணுவ நிறுவல்கள் உட்பட அதன் முக்கிய பகுதிகளை குறிவைத்தது.