நாடே பற்றி எரிகிறது, யாயிர் நெதன்யாகு-வை காணோம்; யார் அவர்?
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இன்று காசாவில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை அழிக்க, தரைவழி பீரங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த போரில் பங்கெடுக்க, உலகின் மூலைமுடுக்கில் உள்ள இஸ்ரேல் குடிமக்கள் அனைவரும் இஸ்ரேல் நோக்கி பயணப்படும் இந்த நேரத்தில், இஸ்ரேல் ஊடகம், யாயிர் நெதன்யாகு எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளது. ஆமாம், யார் அவர்? ஊடங்கங்கள் தேடும் அளவில் அவர் பெரும் தலைவரை என கேட்டால், இல்லை என்பதே பதில். அவர், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன். இஸ்ரேலில் போர் சூழல் அதிகரித்துள்ள இந்த வேளையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு வரும் இந்த நேரத்தில், அதிபரின் மகன், அமெரிக்காவில் உல்லாசமாக இருக்கிறார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டிற்காக போராடாமல், உல்லாசமாக பொழுதை கழிக்கும், யாயிர்
அமெரிக்கா, சீனாவை போலவே, இஸ்ரேலில் கட்டாய ராணுவ சேவை உள்ளது. இதில் பணியாற்றி விடைபெற்ற பலரும், தற்போது நடைபெற்று வரும் போருக்காக மீண்டும், நாடு திரும்பி ராணுவ சேவையில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர். ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் தொடுத்திருக்கும் இந்த போரில், இஸ்ரேலிய இளைஞர்கள் சுமார் 4 லட்சம் இளைஞர்கள் இணைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், நாட்டின் தலைவரும், பிரதமருமான பெஞ்சமின் நெதன்யாகுவின் மகன் யாயிர் நெதன்யாகு, மியாமி கடற்கரையில் உள்ளமசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. யாயிர் உல்லாசமாக பொழுதை கழிப்பது போன்ற புகைப்படத்தை, அவரே வெளியிட்டதுதான் தற்போது விமரிசனத்திற்கு உள்ளாகியுள்ளது.
யார் இந்த யாயிர்?
நெதன்யாகுவின் மூன்றாவது மனைவி சாரா. இவர்களுக்கு பிறந்தவர் தான் யாயிர். 32 வயதாகும் யாயிர், அமெரிக்காவில் வசித்து வருகிறார். ஆனால், நாட்டில் போர் சூழல் நிலவும் நேரத்திலும், நாடு திரும்பாமல் அவர் இருப்பது நாட்டு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யாயிர் ஏற்கனவே பலமுறை சர்ச்சைகளில் சிக்கியவர். முன்னரே, சமூக ஊடகங்களில் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த பதிவுகளை இட்டு, சர்ச்சையில் சிக்கியுள்ளார். 2018ல் அவர் ஒரு பதிவில், 'அனைத்து முஸ்லிம்களும் வெளியேறும் வரை இஸ்ரேலில் அமைதி இருக்காது' என்று பதிவிட்டு பலத்த கண்டனத்தை ஈர்த்தார். அதேபோல, மற்றொரு முறை, தனது தந்தை பெஞ்சமின் நெதன்யாகு, எரிவாயு ஒப்பந்தத்தில் முறைகேடு செய்தார் என ஒரு வீடியோ வெளியிட்டு சர்ச்சையை ஈர்த்தார்.