காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஹமாஸுக்கு எதிரான அதன் "கண்மூடித்தனமான" தாக்குதலால், காசா மீதான போரில் உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலால் தொடங்கிய இப்போரில், தற்போது வரை இஸ்ரேலின் நிலைப்பாட்டை குறித்த அமெரிக்க அதிபரின் கடுமையான கண்டனங்கள் இதுவாகும்.
பாலஸ்தீனியர்களுக்கான இரு-நாடுகளின் தீர்வு குறித்த தனது நிலைப்பாட்டை நெதன்யாகு "மாற்ற" வேண்டும் என்று நன்கொடையாளர்களிடம் பைடன் கூறினார்.
இந்நிலையில், போருக்கு பின் காசா எவ்வாறு இருக்க வேண்டும் என்பது தொடர்பாக, அமெரிக்காவுடன் "கருத்து வேறுபாடு" ஏற்பட்டுள்ளதாக நெதன்யாகு தெரிவித்தார். அமெரிக்கத் இஸ்ரேலை வலுவாக ஆதரித்த சில மாதங்களுக்கு பிறகு, இவ்விவகாரம் இரு நாடுகளிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.
2nd card
50,000 பேர் காயமடைந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தகவல்
அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்த பிரச்சார நிகழ்வில் பேசிய பைடன், சுமார் 1,200 இஸ்ரேலிகள் பலியாக காரணமான ஹமாஸ் தாக்குதலுக்கு பின்னர், "பெரும்பான்மையான உலக நாடுகள் இஸ்ரேலை ஆதரித்ததாக" தெரிவித்தார்.
"ஆனால் கண்மூடித்தனமான குண்டு வீச்சால் அவர்கள் அந்த ஆதரவை இழக்கத் தொடங்குகிறார்கள்" என அதிபர் பேசினார்.
அமெரிக்க அதிபர் இதற்கு முன்னர், 'இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபடுகிறது' என்பதை சொல்ல மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலில் தற்போது வரை, 18,400 உயிரிழந்துள்ளதாகவும், 50,000 பேர் காயமடைந்துள்ளதாகவும், ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
3rd card
இஸ்ரேல் கடுமையான முடிவை எடுக்க வேண்டும்
நெதன்யாகு தனது கடுமையான வலதுசாரி அரசாங்கம் குறித்த "கடினமான முடிவை" எடுக்க வேண்டும் என பைடன் கூறினார்.
"அவர் ஒரு நல்ல நண்பர், ஆனால் அவர் மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன், இஸ்ரேலில் உள்ள இந்த அரசாங்கம் அவர் முடிவெடுப்பதை மிகவும் கடினமாக்குகிறது" என தெரிவித்தார்.
போருக்கு பின்னர், இரண்டு நாடுகளை உருவாக்க அமெரிக்கா முன்மொழியும் திட்டத்தை, இஸ்ரேல் மறுத்து வரும் நிலையில் அது குறித்தும் அதிபர் பேசினார்.
"இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் பழமைவாத அரசாங்கம்" என்று விவரித்த அதிபர், " இஸ்ரேல் இருநாடு கொள்கையை விரும்பவில்லை" எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
4th card
போர் நிறுத்தம் கோரும் ஐநா வாக்கெடுப்பு வெற்றி
முன்னதாக ஐநா பொது சபையில் போர் நிறுத்தம் கோரும் வாக்கெடுப்பு 153 வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
தீர்மானத்திற்கு ஆதரவாக முதல் முறையாக இந்தியா வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 10 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இங்கிலாந்து உட்பட 23 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஐநா தீர்மானம் நேரடியாக எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், சர்வதேச ரீதியிலான அழுத்தத்தை இஸ்ரேல் மீது வழங்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.