காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளது ஐநா
காசா போர்நிறுத்ததின் மீதான புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது வாக்களிக்க உள்ளது ஐநா சபை கடந்தாண்டு அக்டோபர் 7 முதல் நடைபெறும் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர் தாக்குதல் தொடர்பாக ஐநா கவுன்சில் பிளவுபட்டுள்ளது. இது வரை கொண்டுவரப்பட்ட எட்டு தீர்மானங்களில் இரண்டை மட்டுமே அங்கீகரித்துள்ளது. இரண்டுமே முக்கியமாக பேரழிவிற்குள்ளான காசா பகுதிக்கு மனிதாபிமான உதவியை வழங்குவது தொடர்பானதே. முன்னதாக, அமெரிக்கா முன்மொழிந்த முந்தைய உரையை, ரஷ்யாவும், சீனாவும் வீட்டோ செய்ததை அடுத்து, காசாவில் உடனடி போர்நிறுத்தம் குறித்த புதிய வரைவுத் தீர்மானத்தின் மீது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில், திங்கள்கிழமை வாக்களிக்கவுள்ளது. ஹமாஸின் முன்னோடியில்லாத தாக்குதல்களைத் தொடர்ந்து, நிரந்தர கவுன்சில் உறுப்பினரும் முக்கிய இஸ்ரேல் ஆதரவாளருமான அமெரிக்கா, இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை சந்தேகத்திற்கு இடமின்றி ஆதரித்துள்ளது.
தொடரும் படுகொலைகள்; பலியாகும் அப்பாவி உயிர்கள்
காசாவில் மனிதாபிமான நெருக்கடி தீவிரமடைந்து வருவதால், பாலஸ்தீனிய போராளிக் குழுவிற்கு எதிரான போரை நடத்துவதில் இஸ்ரேலுக்கு, அமெரிக்கா தனது ஆதரவைக்குறைத்துள்ளது. அதிகாரபூர்வ இஸ்ரேலிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அக்டோபர் 7 முதல் நடைபெறும் ஹமாஸ் தாக்குதலில், இஸ்ரேலில் இதுவரை 1,160 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில், பெரும்பாலானோர் பொதுமக்கள். ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 250 பணயக்கைதிகளையும் கைப்பற்றியுள்ளதாகவும், அவர்களில் 130 பேர் காசாவில் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. மேலும் பணயகைதிகளில் 33 பேர் இறந்ததாகக் கருதப்படுகிறது. மறுபுறம், ஹமாஸ் வசம் உள்ள காசா பகுதியில் உள்ள சுகாதார அமைச்சகம், தங்கள் பிராந்தியத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 32,226 என்று கூறியது. அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள்.