Page Loader
ரஷ்ய தீவிரவாத தாக்குல்: 4 குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது

ரஷ்ய தீவிரவாத தாக்குல்: 4 குற்றவாளிகள் உட்பட 11 பேர் கைது

எழுதியவர் Sindhuja SM
Mar 23, 2024
03:11 pm

செய்தி முன்னோட்டம்

மாஸ்கோ கச்சேரி அரங்கில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டதில் குறைந்தது 93 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 145 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து, இந்த தாக்குதலை நடத்திய பயங்கரவாதைகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் சந்தேக நபர்களை காரில் துரத்தி சென்ற போலீசார், 11 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேரிடம் இருந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இஸ்லாமிய அரசு குழு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. எங்களது போராளிகள் மாஸ்கோவின் புறநகரில் ஒரு பெரிய கூட்டத்தை தாக்கினர் என்றும், மேலும் அவர்கள் பத்திரமாக தங்கள் தளங்களுக்கு திரும்பினர் என்றும் இஸ்லாமிய அரசு குழு தெரிவித்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ரஷ்ய தீவிரவாத தாக்குல்: 11 பேர் கைது