கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல்
வேல்ஸ் இளவரசி, கேட் மிடில்டன், தனது வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து,அவர் வீட்டில் இருந்து வேலை செய்து வருவதாகவும், கென்சிங்டன் அரண்மனை, தி டெலிகிராப்பிடம் உறுதிப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட் (RFCEC) 'ஷேப்பிங் அஸ்' திட்டத்தில் அவர் பிஸியாக இருக்கிறார் என அரண்மனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேல்ஸ் இளவரசி, தனது பிரச்சாரத்தின் பணிகளை கூர்ந்து கவனித்த வருவதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் ஆரம்பகால வளர்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நோக்கத்துடன், கடந்த ஜனவரி மாதம் அவர் இந்த திட்டத்தை தொடங்கினார்.
யுகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த அறிவிப்பு
கேட் மிடில்டனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனையின் ஊழியர்கள், அவரது தனிப்பட்ட மருத்துவப் பதிவுகளை சட்டவிரோதமாக அணுக முயன்றதாகக் கூறப்பட்டதையடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது. வேல்ஸ் இளவரசிக்கு ஜனவரி மாதம் அறுவை சிகிச்சை செய்த லண்டன் கிளினிக்கில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இது பற்றி மூன்று தொழிலாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கேட் மிடில்டன் பொது வாழ்வில் இருந்து நீண்ட காலமாக இல்லாதது பலவித ஊகங்கள் ஈர்த்தது. குறிப்பாக AI -ஆல் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவேற்றியதிலிருந்து பல வதந்திகள் பரவி வருகின்றன. வேல்ஸ் இளவரசி வயிற்று அறுவைசிகிச்சையில் இருந்து குணமடைந்து வருவதாகவும், ஈஸ்டர் பள்ளி இடைவேளைக்கு முன்பு வரை, அரச பணிகளைத் தொடர முடியாது என்றும் கென்சிங்டன் அரண்மனை தெரிவித்தது