தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
ஜப்பானின் யோனகுனி தீவில் இன்று காலை, (மார்ச் 3), 7.4 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காலை 7.58 மணியளவில் ஹுவாலியனில் இருந்து தென்மேற்காக 18கிமீ தொலைவில் 35 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது.
இதன் அதிர்வுகள் ஜப்பானின் தைவானைத் தாக்கியது.
கடந்த 1999ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 2,500க்கும் மேற்பட்டவர்களைக் கொன்றது மற்றும் 1,300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததனர்.
அதன் பிறகு 25 ஆண்டுகளில் தைவானைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இதுதான்.
நிலநடுக்கத்தால் தைவானின் ஹுவாலியன் நகரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதே நேரத்தில் நாடு முழுவதும் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் மூடவும் அனுமதி வழங்கப்பட்டது.
சுனாமி எச்சரிக்கை
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், நிலநடுக்கத்தின் அளவு 7.4-ஆக இருந்ததாகவும், தைவானின் பூகம்ப கண்காணிப்பு நிறுவனம், ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, 6.5ரிக்டர் அளவு மற்றும் சுமார் 11.8கிமீ ஆழம் கொண்ட பல அதிர்வுகள் தைபேவை தாக்கியதாக USGS கூறியது.
நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு, யோனகுனி தீவில் சுமார் 1 அடி அளவிலான சுனாமி அலை கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம், ஓகினாவா மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது மற்றும் நாட்டின் தென்மேற்கு கடற்கரையை 3 மீட்டர் வரை சுனாமி அலைகள் அடையும் என்று எச்சரித்துள்ளது.
சுனாமியின் தாக்கத்தைக் கண்காணிக்க ஜப்பான் போர் விமானங்களை களமிறக்கியுள்ளது.