NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்
    5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் விளாடிமிர் புடின்

    ரஷ்ய அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, 5வது முறையாக ரஷ்யாவின் அதிபராகிறார் புடின்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 18, 2024
    08:35 am

    செய்தி முன்னோட்டம்

    விளாடிமிர் புடின், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரஷ்யாவின் தேர்தலில், இமாலய வெற்றிபெற்று தன்னுடைய அதிபர் பதவியை மீண்டும் தொடரவுள்ளார்.

    இந்த பதவிகாலத்தை அவர் நிறைவு செய்யும்போது, 200 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் நீண்ட கால தலைவராக பதவியிலிருந்த ஜோசப் ஸ்டாலினின் சாதனையை, 71 வயதான புடின் முறியடியத்ததாக இருக்கும்.

    FOM கருத்துக்கணிப்பின்படி, அதிபர் தேர்தலின் வாக்குகளில், புடின் 87.8% வாக்குகளை வென்றார்.

    இது ரஷ்யாவின் சோவியத்துக்கு பிந்தைய வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச முடிவு என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    புடினை எதிர்த்து போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் Nikolai Kharitonov வெறும் 4% உடன் இரண்டாவது இடத்தையும், புதிய அறிமுகமான Vladislav Davankov மூன்றாவது இடத்தையும், Leonid Slutsky நான்காவது இடத்தையும் பிடித்தனர்

    ட்விட்டர் அஞ்சல்

    ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின்

    மீண்டும் ரஷ்யாவின் அதிபராக தேர்வானார், விளாடிமிர் புதின்... #Putin | #Russia | #ThanthiTV pic.twitter.com/NGQQF40ZEN

    — Thanthi TV (@ThanthiTV) March 18, 2024

    ரஷ்ய அதிபர் தேர்தல்

    ஏவுகணை தாக்குதலுக்கு இடையே நடைபெற்ற ரஷ்ய அதிபர் தேர்தல்

    புடின், மாஸ்கோவில் ஒரு வெற்றி உரையில், உக்ரைன் போரில், ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடர்புடைய பணிகளைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், ரஷ்ய இராணுவத்தை வலுப்படுத்துவதாகவும் ஆதரவாளர்களிடம் கூறினார்.

    "எங்களுக்கு முன்னால் பல பணிகள் உள்ளன. ஆனால் நாம் ஒருங்கிணைக்கப்படும் போது - யார் நம்மை மிரட்டினாலும், நம்மை அடக்கிவிட வேண்டும் என நினைத்தாலும், வரலாற்றில் யாரும் வெற்றி பெற்றதில்லை. அவர்கள் இப்போது வெற்றிபெறவில்லை. எதிர்காலத்திலும் அவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்" என்று புடின் கூறினார்.

    ரஷ்யாவில் தேர்தல் நடைபெறும் நேரத்தில், உக்ரைன் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்தியது. இதில் பல பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விளாடிமிர் புடின்
    ரஷ்யா
    தேர்தல்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    விளாடிமிர் புடின்

    உக்ரைனின் முக்கிய நகரமான பாக்முத்தை கைப்பற்றிய ரஷ்யா: புதின் பாராட்டு  ரஷ்யா
    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலகம்
    இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி ரஷ்யா
    வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா ரஷ்யா

    ரஷ்யா

    அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலக முடிவு  விளாடிமிர் புடின்
    ரஷ்யாவின் வாக்னர் குழு ஹெஸ்புல்லாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை அனுப்புகிறது- அமெரிக்கா இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    ஒரு மாதத்தை தொட்ட இஸ்ரேல் ஹமாஸ் மோதல்- இதுவரை நடந்தது என்ன? இஸ்ரேல்
    "அணு ஆயுதம் பயன்படுத்தப்படும் அபாயம்"- அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை அமெரிக்கா

    தேர்தல்

    மதுரையில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட திட்டம்? விஜயகாந்த்
    வெடிகுண்டு அச்சுறுத்தலுக்கு இடையே பலத்த பாதுகாப்புடன் இன்று பாகிஸ்தானில் பொது தேர்தல் பாகிஸ்தான்
    பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கான் கூட்டணி முன்னிலை; சுயேச்சைகளுடன் நவாஸ் ஷெரீப் கட்சி பேச்சுவார்த்தை பாகிஸ்தான்
    வாக்குப்பதிவு மோசடிகள் நடைபெற்றதற்காக பாகிஸ்தானில் பல வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவு பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025