Page Loader
240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம்
ஆரம்ப நடுக்கம் 4.7 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 10.20 மணிக்கு உணரப்பட்டது

240 ஆண்டுகளுக்கு பின்னர், அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Apr 06, 2024
09:54 am

செய்தி முன்னோட்டம்

வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவின் நியூ ஜெர்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைத் தாக்கிய 4.8 ரிக்டர் அளவிலான அரிய நிலநடுக்கம், 240 ஆண்டுகளுக்கும் பின்னர் பதிவான வலுவான நிலநடுக்கம் ஆகும். ஆரம்ப நடுக்கம் 4.7 கிலோமீட்டர் ஆழத்தில் காலை 10.20 மணிக்கு உணரப்பட்டது. அதன்பின்னர் ரிக்டர் அளவுகோலில் 1.8 முதல் 2.0 வரையிலான 11 பின்அதிர்வுகள் பதிவாகின. நகரில் கிழக்குக் கடற்கரையில் இருந்த கட்டிடங்கள் மேலும்கீழும் குலுங்கிய CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு(USGS) படி, 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், கடந்த ஐந்து தசாப்தங்களில் இப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட மூன்றாவது பெரிய நிலநடுக்கம் மற்றும் 240 ஆண்டுகளுக்கும் மேலாக நியூ ஜெர்சியில் மிகவும் வலுவான நிலநடுக்கம் ஆகும்.

embed

நியூ ஜெர்சி நகரில் நிலநடுக்கம்

#BREAKINGMore footage of the earthquake on the East Coast felt in New York Long Island and #NewYork #newjerseyearthquake#BhuvanBam #Aftershock #knacking #jadeja #SRHvsCSK #YaliCapkini pic.twitter.com/XQtE0hvm9z— Rahul Anand (@RahulAnand10730) April 6, 2024