தெற்கு காசாவில் இருந்து அனைத்து படைகளையும் திரும்பப் பெற்றது இஸ்ரேல்
செய்தி முன்னோட்டம்
கிட்டத்தட்ட 184 நாட்கள் போருக்கு பிறகு காசா பகுதியின் தெற்குப் பகுதியில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தங்கள் தரைப்படைகளை திரும்பப் பெற்றுள்ளன.
தற்போது, நஹால் படையணி மட்டுமே காஸாவில் உள்ளது.
எனினும் ஹமாஸ் என்ற பயங்கரவாத அமைப்பை அழிக்க இஸ்ரேல் கோரும் தெற்கு காசா நகரமான ரஃபாவிற்குள் நீண்டகாலமாக நிலைகொண்டுள்ள இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை திரும்பப் பெறுவது தாமதப்படுத்துமா என்பது குறித்த தெளிவான விவரம் இல்லை.
போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை உடன்படிக்கையை அடைவதை நோக்கமாகக் கொண்ட புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்த எகிப்து தயாராகி வரும் நிலையில் இந்த நிலையை இஸ்ரேல் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்நிறுத்தம்
அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போர் நிறுத்தத்தை கோருகின்றன
கடந்த சில நாட்களுக்கு முன்னர், அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் உடனடி போர் நிறுத்தத்தைக் கோரி, இஸ்ரேலிய பிரதமரிடம் பேசியிருந்தார்.
அதோடு, ரஃபாவில் உள்ள இஸ்ரேலின் தரைப்படை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பல்வேறு உதவி அமைப்புகள் மற்றும் உலக நாடுகள் கண்டித்து வருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் யுத்ததினால், சுமார் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள், அவர்களில் பெரும்பாலோர் இடம்பெயர்ந்து தற்போது ரஃபாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்த போரில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், 33,100 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.