
பாகிஸ்தான் பிரதமர் பதவியை பிலாவல் பூட்டோ ஏற்க மறுத்ததாக தகவல்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரி பாகிஸ்தான் பிரதமர் பதவியை தான் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
தனது கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சிகளுக்கு இடையே பிரதமர் பதவியை பகிர்ந்து கொள்ளும் அதிகாரப் பகிர்வு குறித்து விவதைக்கப்பட்டதாக பிலாவல் பூட்டோகூறியுள்ளார்.
ஆனால், மக்கள் ஆணை இல்லாமல் அந்த பதவியை ஏற்க தனக்கு விருப்பம் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் வெளியுறவு அமைச்சரான பிலாவல் பூட்டோ PPP கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஆவார்.
ஆனால், இந்த மாதம் நடந்த பாகிஸ்தான் பொது தேர்தலில் அவரது கட்சி தேசிய சட்டமன்றத்தில் 54 இடங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
பாகிஸ்தான்
பாகிஸ்தானில் ஆட்சி அமைப்பதில் பிரச்சனை
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் சுயேச்சை வேட்பாளர்களும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியும் 90 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன.
அரசாங்கத்தை அமைக்க, 266 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய சட்டமன்றத்தின் 133 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே ஒரு கட்சியால் தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.
அதனால், தேர்தலுக்கு பின்பு, நவாஸ் ஷெரீப்பின் கட்சியும் பிலாவல் பூட்டோவின் கட்சியும் கூட்டணி சேர முடிவு எடுத்தன.
ஆனால், அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் பல முறை பேச்சு வார்த்தை நடத்தியும், அதிகார பகிர்வு விவகாரத்தில் அவர்களால் ஒரு முடிவை எட்ட முடியவில்லை.