
காண்க: நைரோபி எரிவாயு நிறுவனத்தில் தீ விபத்து; இருவர் பலி, 165 பேர் காயம்
செய்தி முன்னோட்டம்
கென்யாவின் தலைநகர் நைரோபியில் எரிவாயு வெடித்ததில் இருவர் இறந்துள்ளனர், குறைந்தது 165 பேர் படுகாயம் காயமடைந்தனர்.
செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, இந்த சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவுக்கு முன் (கென்ய நேரப்படி) நடந்தது.
நைரோபியின் எம்பகாசி பகுதியில் உள்ள ஒரு எரிவாயு நிரப்பும் நிறுவனத்தில், இந்த பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும், விபத்தில் நிறுவனத்தின் கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும், எக்ஸ் தளத்தில் செய்தித் தொடர்பாளர் பதிவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோ, இந்த விபத்தின் போது நடந்த ஒரு கேஸ் வெடிப்பை படம்பிடித்துள்ளது. எதிர்பாராத நேரத்தில், அந்த நிறுவனத்தில் உள்ள எரிவாயு சேமித்த வைத்திருந்த கிடங்கு ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்தது.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ட்விட்டர் அஞ்சல்
தீ விபத்து
🚨#Breaking: Explosion at Nairobi gas plant kills 2, injures 167. Fireballs and fires rage near residential area. Building hosting company badly damaged. Death toll expected to rise.#Nairobi #Kenya pic.twitter.com/Xnl1iFlLbf
— World News Global (@WorldNewsGb) February 2, 2024
ட்விட்டர் அஞ்சல்
கொழுந்துவிட்டு எரியும் தீ
🚨 Nairobi, Kenya 🇰🇪 A massive explosion at a gas plant in #Embakasi has claimed two lives and left 167 injured. Authorities are working to control the situation. #NairobiExplosion #Kenya #Gasexplosion #Nairobi pic.twitter.com/yVFTEbHHS3
— Jamal Amin (@AminJAbdullah) February 2, 2024