Page Loader
காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI
காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI

காணாமல் போன இந்திய பெண்ணை கண்டுபிடிக்க, $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது FBI

எழுதியவர் Venkatalakshmi V
Dec 22, 2023
03:02 pm

செய்தி முன்னோட்டம்

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, நியூஜெர்சியில் இருந்து காணாமல் போன, இந்தியாவைச் சேர்ந்த 29வயது பெண் மாணவியைப் பற்றிய தகவல்களுக்கு, ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன்(FBI) $10,000 வரை வெகுமதி அளிப்பதாக அறிவித்துள்ளது. காணாமல் போன மயூஷி பகத் என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணை கண்டுபிடித்து தருமாறு, மே 1, 2019 அன்று, அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். FBI நெவார்க் கள அலுவலகம் மற்றும் ஜெர்சி நகர காவல்துறை ஆகியவை மயூஷி பத்தை கண்டுபிடிக்க, தற்போது பொதுமக்களின் உதவியை நாடியுள்ளன. அவரது இருப்பிடம் அல்லது மீட்பதற்கான தகவல்களுக்கு, 10,000 அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதியாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

card 2

இணையத்தளத்தில் புகைப்படம் பதிவேற்றி தேடும் FBI

ஜூலை 1994 இல் இந்தியாவில் பிறந்த பகத், மாணவர் விசாவில் அமெரிக்காவின் நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து வந்தார் என கூறப்படுகிறது. நியூயார்க்கில் உள்ள FBI இன் அறிக்கையின்படி, அவர் ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர் என கூறப்பட்டுள்ளது. மேலும் புலன் விசாரணை செய்தவர்கள் கொடுத்த தகவல் படி, அவருக்கு நியூ ஜெர்சியின் சவுத் ப்ளேன்ஃபீல்டில் நண்பர்கள் அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவரை எங்கு தேடியும் கிடைக்காத காரணத்தால், அவர் இருக்கும் இடம் அல்லது அவள் காணாமல் போனது பற்றிய தகவல் தெரிந்தவர்கள் எப்.பி.ஐ நெவார்க் அல்லது ஜெர்சி நகர காவல் துறையை அழைக்க வேண்டும் என்று தற்போது FBI தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.