Page Loader
வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்

வடக்கு மெக்சிகோவில் நடந்த பார்ட்டியில் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி, பலர் காயம்

எழுதியவர் Sindhuja SM
Dec 30, 2023
10:40 am

செய்தி முன்னோட்டம்

வடக்கு மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு பார்ட்டிக்குள் நுழைந்த மூன்று துப்பாக்கிதாரிகள் பார்ட்டியில் இருந்தவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதால் குறைந்தது ஆறு பேர் கொல்லப்பட்டனர், மேலும் 26 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் இருவர் 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஆவர். காயமடைந்தவர்களில் ஐந்து பேர் குழந்தைகள் ஆவர். வடக்கு மெக்சிகோவின் எல்லையோர மாநிலமான சோனோராவில் உள்ள சியுடாட் ஒப்ரேகன் நகரில் இந்த சம்பவம் நடந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில், நான்கு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் 13 பேர் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டனர்.

பைஜ்ட்க்லவ்

குற்றவாளிகளை பிடிக்க தீவிர விசாரணை தொடங்கியது 

கொலை மற்றும் பிற குற்றச்சாட்டுகளுக்காக தேடப்பட்ட ஒரு சந்தேகத்திற்குரிய கார்டெல் உறுப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் இதுவாகும். ஆனால், அவர் பிடிபடுவதற்கு முன்பே, அந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய 4 பேரில் ஒருவர் ஏற்கனவே பார்ட்டிக்குள் இருந்ததாகவும், 3 பேர் தாக்குதலின் போது பார்ட்டிக்குள் நுழைந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். பின்பு, பார்ட்டியில் இருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய அவர்கள் காவல்துறையில் சிக்காமல் தப்பி ஓடினார். அவர்களை பிடிப்பதற்காக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.