Page Loader
சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா
சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா

சீன இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிடும் அமெரிக்கா

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 22, 2023
01:43 pm

செய்தி முன்னோட்டம்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரியை உயர்த்தத் திட்டமிட்டு வருகிறது அமெரிக்கா. டொனால்டு ட்ரம்ப் பதவியில் இருந்து போது சீன பொருட்கள் மீதான இறக்குமதி விதிக்கப்பட்டு, ஜோ பைடன் பதவியேற்ற பிறகு அது 25% ஆக உயர்த்தப்பட்டது. சீனாவிலிருந்து கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர்கள் அளவிலான பொருட்களை அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கான வரியை அடுத்த ஆண்டு மறுசீரமைப்பு செய்து உயர்தத் பரிசீலனை செய்து வருகிறது அமெரிக்கா. முக்கியத்துவமான சில பொருட்கள் மீது வரியை உயர்த்தவிருக்கும் நிலையில், முக்கியத்துவமில்லாத சில சீன இறக்குமதி பொருட்களை மீதான வரியைக் குறைக்கவும் திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா.

வணிகம்

அமெரிக்காவின் திட்டம் என்ன? 

எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது வரியை உயர்த்தி, முக்கியதுவமில்லாத பொருட்கள் மீதான வரியைக் குறைப்பதன் மூலம், சீனாவுடனான வணிகத்தை சமநிலையில் வைத்திருக்க முடியும் என நினைக்கிறது அமெரிக்கா. மேலும், அமெரிக்க அரசைச் சேர்ந்த சிலர் சீனாவின் இறக்குமதி பொருட்கள் மீதான வரி போதிய அளவு இல்லை என்ற கருத்தைக் கொண்டிருப்பதும் இந்தப் புதிய வரி உயர்வுப் பரிசீலனைக்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. அமெரிக்காவின் இந்த முடிவு, ஆட்டோமோட்டிவ் துறை மற்றும் அமெரிக்க- சீன வணிக ஒப்பந்தம் ஆகியவற்றில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.