Page Loader
300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது 
303 இந்தியர்களுடன் நிகரகுவாவிற்கு புறப்பட்ட விமானத்தை விசாரணைக்காக பிரான்ஸ் நேற்று தடுத்து நிறுத்தியது.

300 இந்தியர்கள் சென்ற விமானத்தை தடுத்து நிறுத்திய பிரான்ஸ்: 2 பேர் கைது 

எழுதியவர் Sindhuja SM
Dec 23, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

300க்கும் மேற்பட்ட இந்திய பயணிகளை ஏற்றிக்கொண்டு நிகரகுவா நோக்கி புறப்பட்ட விமானத்தை "மனித கடத்தல்" என்ற சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்திய பிரான்ஸ் காவல்துறையினர், இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இந்திய அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். 303 இந்தியர்களுடன் நிகரகுவாவிற்கு புறப்பட்ட விமானத்தை விசாரணைக்காக பிரான்ஸ் நேற்று தடுத்து நிறுத்தியது. ரோமானிய நிறுவனமான லெஜண்ட் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ340 விமானம், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து புறப்பட்டு கிழக்கு பிரான்சில் உள்ள வாட்ரி விமான நிலையத்தில் ஒரு தொழில்நுட்ப நிறுத்தத்திற்காக நேற்று தரையிறங்கியது. அப்போது விமானத்தில் இருந்த சில பயணிகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, அந்த விமானம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஜடல்வ்

இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் நிபுணத்துவம் பெற்ற பிரிவினர், அந்த விமானத்தில் இருந்த இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், லெஜண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் எந்த தவறும் செய்யவில்லை என்றும், அதிகாரிகளின் கோரிக்கைகளை நிறுவனம் பூர்த்தி செய்யும் என்றும் லெஜண்ட் ஏர்லைன்ஸின் வழக்கறிஞர் லிலியானா பகாயோகோ தெரிவித்துள்ளார். இந்திய பயணிகளுக்கு ஆதரவளிக்க இந்திய தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். 303 இந்தியர்கள் பிரான்ஸ் விமான நிலையத்தில் நேற்று இரவைக் கழித்தனர். அவர்கள் எப்போது மீண்டும் பறக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. "நாங்கள் நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். பயணிகளின் நல்வாழ்வையும் உறுதிசெய்து கொண்டிருக்கிறோம்" என்று பிரான்சில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.