NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 82: அகதிகள் முகாம்களுக்குள்ளும் விரிவடைந்துள்ள இஸ்ரேலின் தாக்குதல்

    எழுதியவர் Srinath r
    Dec 27, 2023
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    தெற்கு காசாவில் தரைவழி தாக்குதலை நகர்ப்புற அகதிகள் முகாம்களுக்குள் விரிவு படுத்தியுள்ள இஸ்ரேல், மக்களை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

    பல மாதங்களுக்கு நடைபெறலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ள இப்போரில், இஸ்ரேலின் சமீபத்திய நடவடிக்கை பேரழிவுகளை அதிகப்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது.

    முதலில் வடக்கு காசாவில் இருந்து தெற்கு நோக்கி நகர பாலஸ்தீனர்களுக்கு உத்தரவிட்ட இஸ்ரேல், பின்னர் நகரின் தெற்கு பகுதிகளிலும் தாக்குதலை தொடங்கியது.

    இஸ்ரேலின் இந்த நடவடிக்கை, புகலிடம் தேடி பாலஸ்தீனியர்களை மேலும் சிறிய பகுதிகளுக்கு விரட்டுகிறது.

    பொதுமக்கள் உயிரிழப்பைக் கட்டுப்படுத்த இஸ்ரேலுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்தாலும், போர்நிறுத்தத்திற்கான சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதிலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இராணுவம் போரை தீவிரப்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

    2nd card

    20,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

    சமீபத்திய ராணுவ தாக்குதல்களில், மிக மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவரும் இஸ்ரேலின் காசா தாக்குதலில், தற்போது வரை 20,900க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    இதில், மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 240 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நிர்வகிக்கும் பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இந்த அமைச்சகம், பாலஸ்தீனர்கள் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினரின் உயிரிழப்புகளை வேறுபடுத்துவதில்லை.

    மேலும், அக்டோபர் ஏழாம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 1,120 இஸ்ரேலிகள் கொல்லப்பட்ட நிலையில், 240க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.

    இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், இன்னமும் நூற்றுக்கணக்கானோர் காசாவில் சிக்கி உள்ளதாக நம்பப்படுகிறது.

    3rd card

    பைடன் மற்றும் கத்தார் எமிர் பணயக்கைதிகள் விடுதலை பற்றி பேச்சு

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கத்தார் எமிர் ஆகியோர், பணயக்கைதிகள் விடுதலை, காசாவிற்கு அதிக மனிதாபிமான உதவிகளை அனுப்புவது ஆகியவற்றை குறித்து பேசியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    நவம்பர் மாத இறுதியில் ஏற்படுத்தப்பட்ட ஒரு வார போர் நிறுத்தத்திற்கு, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மத்தியில், கத்தார் மற்றும் எகிப்து பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    "அமெரிக்க குடிமக்கள் உட்பட ஹமாஸ் பிடியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதற்கான அவசர முயற்சி குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்" என வெள்ளை மாளிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்
    காசா
    ஹமாஸ்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    30 பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுவித்ததை அடுத்து 12 பிணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்தை நீட்டிக்க, பேச்சுவார்த்தைகள் தீவிரம் இஸ்ரேல்
    இஸ்ரேல் ஹமாஸ் போர்- இறுதி நாள் போர் நிறுத்தத்தில் 16 பணய கைதிகளை விடுவித்தது ஹமாஸ் இஸ்ரேல்
    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க முடிவு இஸ்ரேல்

    இஸ்ரேல்

    காசா போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க ஹமாஸ் முயற்சி இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    காலிஸ்தான் பயங்கரவாதி மீதான கொலை சதியை விசாரிக்க இந்தியா குழு அமைத்திருப்பது சரியானது- பிளிங்கன் அமெரிக்கா
    முடிவுக்கு வந்தது ஏழு நாள் போர் நிறுத்தம்- மீண்டும் தொடங்கியது இஸ்ரேல் ஹமாஸ் போர் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    காசா

    வெள்ளிக்கிழமைக்கு முன் பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது: இஸ்ரேல் இஸ்ரேல்
    அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர் கைது; தீவிரமடையும் இஸ்ரேல் போர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    தாய்லாந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 25 பணயக் கைதிகளை, விடுதலை செய்தது ஹமாஸ் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஹமாஸ்

    பாலஸ்தீனை சேர்ந்த 6 பெண்கள் மற்றும் 33 சிறுவர்களை இஸ்ரேல் விடுவித்தது பாலஸ்தீனம்
    காசா போர்நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்தார் அமெரிக்க அதிபர்  இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நான்கு நாட்கள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க முயற்சிப்பதாக ஹமாஸ் தகவல் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்
    நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை எலான் மஸ்க்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025