அடுத்த செய்திக் கட்டுரை
வீடியோ: வானில் இருந்து கீழே விழுந்து வெடித்த சீன ராக்கெட்
எழுதியவர்
Sindhuja SM
Dec 27, 2023
09:09 am
செய்தி முன்னோட்டம்
செவ்வாய்க்கிழமை காலை 'லாங் மார்ச் 11 கேரியர்' என்ற ராக்கெட்டின் மூலம் மூன்று புதிய சோதனை செயற்கைக்கோள்களை சீனா விண்ணில் செலுத்தியது.
ஆனால், அதில் பொருத்தப்பட்டிருந்த ஒரு ஜோடி பக்க பூஸ்டர்கள் திடீரென்று மக்கள் வசிக்கும் பகுதிகளில் மோதி வெடித்தது.
இந்நிலையில், அந்த பூஸ்டர்கள் வானத்திலிருந்து அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விழுந்து வெடிப்பதைக் காட்டும் ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அது விழுந்த பின் மக்கள் அதை வேடிக்கை பார்ப்பதை காட்டும் ஒரு வீடியோவும் வெளியாகி உள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங்கின் கீழ்நிலை குவாங்சி பகுதியில் அந்த பூஸ்டர்கள் விழுந்ததாக ஸ்பேஸ் நியூஸ் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகும் சீன ராக்கெட்டின் வீடியோ
Wake up babe new Chinese Long March booster just dropped pic.twitter.com/pfmgZwD0rE
— Chris Combs (iterative design enjoyer) (@DrChrisCombs) December 26, 2023