செங்கடலில் தாக்குதல்: 3 கப்பல்களை மூழ்கடித்து, 10 ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் கொன்றது அமெரிக்கா
செங்கடலில் மார்ஸ்க் கொள்கலன் கப்பல் மீது ஈரான் ஆதரவு ஹவுதி போராளிகள் நடத்திய தாக்குதலை அமெரிக்க ஹெலிகாப்டர்கள் முறியடித்து. மேலும், மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 ஹவுதி போராளிகளை அமெரிக்கா கொன்றுள்ளது. அமெரிக்க, மார்ஸ்க் மற்றும் ஹூதி அதிகாரிகள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை GMT 0330 மணியளவில் தாக்குதல் நடத்தியவர்கள் சிங்கப்பூர் கப்பலான Maersk Hangzhou இல் ஏற முயன்றனர். அதனை தொடர்ந்து, Maersk Hangzhou கப்பல் அவசர அழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை பெற்று விரைந்து வந்த யுஎஸ்எஸ் ஐசன்ஹோவர் மற்றும் யுஎஸ்எஸ் கிரேவ்லியின் ஹெலிகாப்டர்கள் கப்பலின் பாதுகாப்புக் குழுவுடன் சேர்ந்து, கடற்படை தாக்குதல் நடந்தினர்.
இந்திய பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அதிகரிக்கும் தாக்குதல்கள்
அந்த தாக்குதலில் மூன்று கப்பல்களை மூழ்கடித்து 10 ஹவுதி போராளிகளை அமெரிக்கா கொன்றுள்ளது. அந்த தாக்குதல் நடந்த பிறகு, 48 மணி நேரத்திற்கு செங்கடல் வழியாக எந்த கப்பலும் பயணம் செய்ய அனுமதிக்கப்படாது என்று மெர்ஸ்க் கூறியுள்ளது. Maersk Hangzhou கப்பலின் பணியாளர்கள் எச்சரிக்கை அழைப்புகளுக்கு செவிசாய்க்க மறுத்ததால் போராளிகள் குழு தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ஏமன் நாட்டை சேர்ந்த ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள், செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மத்திய வட அரபிக்கடல் ஆகிய பகுதிகளை கடந்து செல்லும் வணிக கப்பல்களை குறிவைத்து கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்திய கடற்படை மத்திய மற்றும் வட அரபிக்கடலில் கண்காணிப்பு பணிகளை மேம்படுத்தியுள்ளது.