LOADING...
K-pop ரசிகர்கள், டிஜிட்டல் நோமட்ஸ் ஆகியோருக்கு தென் கொரியா விசாக்களை அறிமுகப்படுத்த உள்ளது
K-pop ரசிகர்கள், டிஜிட்டல் நோமட்ஸ் ஆகியோருக்கு புதிய விசா

K-pop ரசிகர்கள், டிஜிட்டல் நோமட்ஸ் ஆகியோருக்கு தென் கொரியா விசாக்களை அறிமுகப்படுத்த உள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Dec 29, 2023
11:45 am

செய்தி முன்னோட்டம்

தற்போது தமிழக இளைஞர்கள் பலரையும் கவர்ந்துள்ளது K-நாடகங்கள், K-pop இசை மற்றும் கொரிய உணவு வகைகள். இது உலகம் முழுவதுமே தற்போது பலராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனை கச்சிதமாக பயன்படுத்த தென் கொரியா திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 20 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை தென்கொரியாவிற்கு ஈர்க்க திட்டமிட்டுள்ளது அந்நாட்டின் அரசு. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், அதன் வளமான கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முயற்சியில், தென் கொரியா, 2024 இல் இரண்டு புதிய விசாக்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது: ஒன்று, டிஜிட்டல் நோமாட் விசா மற்றும் கே-கலாச்சார பயிற்சி விசா.

card 2

பணியிட கலாச்சாரத்தை ஊக்குவிக்க டிஜிட்டல் நோமாட் விசா

டிஜிட்டல் நோமாட் விசா என்பது பணியிட கலாச்சாரத்தை பூர்த்தி செய்யும். வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலாவாசிகள், தென் கொரியாவில் இரண்டு ஆண்டுகள் வரை தங்கி, இங்கிருந்தபடியே தங்கள் வேலையை தொடரவும் அனுமதிக்கிறது. இந்த விசாவிற்கான குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2024 இன் இரண்டாம் பாதியில் கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த நடவடிக்கை புதிய மற்றும் ஊக்கமளிக்கும் சூழலைத் தேடும், ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.

card 3

கொரிய உள்ளடக்க ஆர்வலர்களுக்கான K-கலாச்சார பயிற்சி விசா

கொரிய பொழுதுபோக்கு ஆர்வலர்களுக்கு, K-கலாச்சார பயிற்சி விசா மிகவும் பொருத்தமானது. இது கொரிய உள்ளடக்கத்தின் ரசிகர்களுக்கு, செழிப்பான பொழுதுபோக்கு அம்சங்களை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த முன்முயற்சியுடன், தென் கொரியா 2024 இல் "K கலாச்சார நிகழ்வுகளை" நடத்தும் எண்ணத்திலும் இருக்கிறது. இதில் இசை, உள்ளூர் உணவு வகைகள் மற்றும் மேக்அப் ஆகியவை இடம்பெறும். கொரியாவில் "K டூரிசம் ரோட் ஷோ" என்ற பெயரில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ரோடு ஷோ, அமெரிக்கா மற்றும் ஸ்வீடன் போன்ற நாடுகளிலும் தொடரும்.

Advertisement

card 4

உள்கட்டமைப்பு சீர்திருத்தங்களுடன் பயண அனுபவத்தை மேம்படுத்த திட்டம்

மேலும், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு சுகமான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்காக, தென் கொரியா அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துகிறது. சர்வதேச பார்வையாளர்கள் ஷாப்பிங் செய்யும் போது, வெளிநாட்டு மொபைல் கட்டண வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. வரவிருக்கும் புதிய செயலியில், சுற்றுலாப் பயணிகள் டாக்ஸிகள், பேருந்துகள் மற்றும் ரயில்களை எளிதாக முன்பதிவு செய்ய உதவும். கூடுதலாக, தற்போதுள்ள வழிசெலுத்தல் அமைப்புகளின் ஆங்கில பதிப்புகள் பயணிகளுக்கு தென் கொரியாவை சிரமமின்றி ஆராய உதவும் பணியில் உள்ளன.

Advertisement

card 5

சுற்றுலா வருவாயை அதிகரிக்க திட்டம்

கோவிட் தொற்றுக்கு முன், சுற்றுலாத்துறை, தென் கொரியாவின் ஐந்தாவது மிக உயர்ந்த வருமான ஆதாரமாக இருந்தது. 2019இல் 17.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் அந்த நாட்டிற்கு வருகை தந்திருந்தனர். எனினும், 2021ஆம் ஆண்டில், சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை 9.6 லட்சமாக சரிந்ததது. இது தொற்றுநோய்க்கு முந்தைய எண்ணிக்கையில் 6% மட்டுமே. இந்த விசாக்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், தென் கொரிய அரசாங்கம், 2027ஆம் ஆண்டுக்குள் 30 பில்லியன் டாலர் மதிப்பிலான சுற்றுலா வருவாயை உருவாக்க முடியும் என நம்புகிறது.

Advertisement