மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் ட்ரம்ப் முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதிப்பு
செய்தி முன்னோட்டம்
ஜனவரி 2021ல் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்பு இருப்பதாக கூறி, மைனே மாகாணமும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான முதன்மை வாக்கெடுப்பில் பங்கேற்க தடைவிதித்துள்ளது.
மைனே மாநிலச் செயலர் ஷென்னா பெல்லோஸ் தனது தீர்ப்பில், ஜனவரி 6, 2021 நிகழ்வுகள் "வெளியேறும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரிலும், அவரின் அறிவுக்கு உட்பட்டும் மற்றும் ஆதரவுடன் நிகழ்ந்தன" என கூறியுள்ளார்.
அமெரிக்க அரசியலமைப்பு, அதன் அஸ்திவாரங்கள் மீதான தாக்குதலை பொறுத்துக்கொள்ளாது என தெரிவித்துள்ளவர், மேலும், மைனே சட்டமும் தான் இதற்கு எதிராக செயல்பட வேண்டியதை உணர்த்துவதாக, தனது தீர்ப்பில் தெரிவித்தார்.
கிளர்ச்சியாளர்கள் தேர்தலில் போட்டியிட கூடாது என்ற, அரசியலமைப்பு விதியின் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2nd card
ட்ரம்பை தகுதி நீக்கம் செய்த கொலராடோ மாகாணம்
முன்னதாக, இந்த மாதத்தின் மத்தியில் மற்றொரு அமெரிக்க மாகாணமான கொலராடோவும், முன்னாள் அதிபர் ட்ரம்பின் நாடாளுமன்ற கலவரத்துடனான தொடர்புகளுக்காக, குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான முதன்மை வாக்கெடுப்பில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த ஏழு நீதிபதிகள் கொண்ட கொலராடோ மாகாண நீதிமன்றம், 4-3 என்ற எண்ணிக்கையில் ட்ரம்புக்கு எதிரான இந்த உத்தரவை பிறப்பித்தனர்.
இருப்பினும் இந்த தீர்ப்புகளுக்கு எதிராக ட்ரம்ப், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
3rd card
முன்னாள் அதிபர் எதற்காக தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்?
கடந்த, 2016-20 ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப, 2020ம் ஆண்டில் நடந்த தேர்தலில் தோல்வியை தழுவினார்.
இந்த தேர்தல் முடிவுகளை எதிர்த்து, அவர் தூண்டியதாக சொல்லப்படும் கிளர்ச்சியால், அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அவரின் ஆதரவாளர்கள் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது பல்வேறு மாகாண நீதிமன்றங்களில், அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.