உலகம் செய்தி
உலகில் எவைவெல்லாம் செய்தியாக உருவாகின்றதோ, அவை சுடச்சுட உங்கள் பார்வைக்கு இங்கே.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர், கனடா இந்தியா உறவுகளில் மாற்றம்- ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாதியான குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொலை செய்ய இந்தியர் முயன்றதாக, அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்திய-கனடா உறவுகளில் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் கொரோனா; முகக்கவசத்தை கட்டாயமாக்கிய சிங்கப்பூர் அரசு
உலகெங்கும் கொரோனா நோய் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சிங்கப்பூர் அரசாங்கம் முகக்கவசத்தை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
"இந்தியாவோ, அமெரிக்காவோ இல்லை. பாகிஸ்தானின் நிலைமைக்கு நாம் தான் காரணம்"- நவாஸ் ஷெரீப்
பாகிஸ்தானின் தற்போதைய பொருளாதார சூழ்நிலைக்கு, இந்தியாவோ அமெரிக்காவோ காரணமில்லை, பாகிஸ்தான் தான் காரணம் என, சக்தி வாய்ந்த ராணுவத்தை மறைமுகமாக குறிப்பிட்டு, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
JN.1 கோவிட்-19 திரிபு,'ஆர்வத்தின் மாறுபாடு' என வகைப்படுத்தப்பட்டுள்ளது: WHO
உலக சுகாதார அமைப்பு (WHO),நேற்று, JN.1 கொரோனா வைரஸ்-ஐ "ஆர்வத்தின் மாறுபாடு" என்று வகைப்படுத்தியது.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் இனி டிரம்ப் போட்டியிட முடியாது: கொலராடோ நீதிமன்றம் அதிரடி உத்தரவு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ஆதரவாளர்களை தூண்டிவிட்டு, கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டதற்காக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், கொலராடோ பிரைமரி தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இனி விசாவுக்கு அலைய வேண்டியதில்லை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு குட் நியூஸ்!
எச்-1பி விசா வைத்திருக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், நாட்டை விட்டு வெளியேறாமல் விசாவை புதுப்பிக்கும் திட்டத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின.
சீனாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 110க்கும் மேற்பட்டோர் பலி
வடமேற்கு சீனாவில் உள்ள கன்சு மற்றும் அண்டை மாநிலமான கிங்காய் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் குறைந்தது 111 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகம் செவ்வாய்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம்
காஸாவின் ஷெஜய்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேலியப் படைகளால் தவறுதலாக மூன்று பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
"இஸ்லாமும் ஐரோப்பாவும் இணக்கப் பிரச்சனையைக் கொண்டுள்ளன": இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி
இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் ஐரோப்பிய நாகரிகத்தின் மதிப்புகள் மற்றும் உரிமைகள், இரண்டிற்கும் இணக்க பிரச்னைகள் உள்ளது என்று இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்திய 4 கிமீ நீள சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் கட்டமைத்துப் பயன்படுத்தி வந்த 4 கிமீ நீள சுரங்கப்பாதை ஒன்றை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்து கைப்பற்றியிருக்கிறது.
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கராச்சி மருத்துவமனையில் அனுமதி; விஷம் வைத்து கொல்ல சதி என தகவல்
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், கடுமையான உடல்நலக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகனத்தின் மீது கார் மோதல்
நேற்று, ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் உள்ள வாகனத்தின் மீது கார் ஒன்று மோதியது.
"அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்"- புலம்பெயர்ந்தோர் குறித்து ட்ரம்ப் பேச்சு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நியூ ஹாம்ப்ஷயர் பேரணியில் புலம்பெயர்ந்தோர், "அமெரிக்காவின் இரத்தத்தை விஷமாக்குகிறார்கள்" என பேசினார்.
லிபியா கடற்கரையில் படகு மூழ்கி விபத்து: 60க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் பலி
லிபியாவின் கடற்கரையில் படகு மூழ்கி விபத்து ஏற்பட்டதால் குறைந்தது 61 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர். மேலும், அவர்கள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
பணயக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தை- நெதன்யாகு தகவல்
காசாவில் ஹமாஸால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை மீட்பதற்கான புதிய பேச்சுவார்த்தைகள், கத்தார் மத்தியஸ்தத்தில் நடந்து வருவதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிப்படுத்தினார்.
குவைத் மன்னர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா காலமானார்
மத்திய கிழக்கு நாடான குவைத்தின் ஆளும் எமிர், ஷேக் நவாப் அல் அகமது அல் சபா, உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருக்கு வயது 86.
சீனாவில் விரிவாக்கம் செய்யப்பட்ட ஐபோன் பயன்பாட்டுத் தடை உத்தரவு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் குறிப்பிட்ட மாகாணங்களைச் சேர்ந்த அரசு நிறுவன ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டிருந்தது. தேசத்தின் பாதுகாப்பு கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அப்போது தகவல் வெளியாகியிருந்தது.
சிங்கப்பூர்: அதிகரித்து வரும் கொரோனா தொற்று, மக்களை முகக்கவசம் அணிய வலியுறுத்தும் அரசு
சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் (MOH) பொதுவெளியில் செல்லும்போது தொற்றால் பாதிக்கப்படாதவர்களும் முகக்கவசம் அணிய வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலிய உளவுத்துறை ஏஜென்ட்டை தூக்கிலிட்டது ஈரான்
இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஏஜென்ட் ஒருவர் இன்று ஈரானின் தென்கிழக்கு சிஸ்தான்-பாலுசெஸ்தான் மாகாணத்தில் தூக்கிலிடப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பிப்ரவரி 8ல் தேர்தலை அறிவித்தது
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர், வெள்ளிக்கிழமை இரவு அந்நாட்டின் தேர்தல் ஆணையம் பொது தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
ஒரு விபத்தில் 16 பேரை கொன்ற இந்தியரை நாட்டை விட்டு வெளியேற்ற இருக்கும் கனடா
ஹம்போல்ட் ப்ரோன்கோஸ் பேருந்து விபத்தை ஏற்படுத்திய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிரக் டிரைவர் ஜஸ்கிரத் சிங் சித்து, கனடாவை விட்டு வெளியேற்றப்பட இருக்கிறார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல்
அமெரிக்க-கனடிய குடிமகனான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல சதி செய்ததாகக், இந்தியர் மீது குற்றம் சாட்டப்பட்டதற்கு, இந்திய-அமெரிக்க அரசியல் தலைவர்கள் தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
காசாவில் தவறாக 3 பணயக் கைதிகளை கொன்ற இஸ்ரேல்
காசாவில் ஹமாசுக்கு எதிரான போரில், "அச்சுறுத்தல்" என்று தவறாகக் கருதி மூன்று பணயக் கைதிகளை அதன் படைகள் சுட்டுக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம்
உக்கரைனில் நடந்த கிராம கவுன்சிலர் கூட்டத்தில், சக கவுன்சிலர்கள் மீது கவுன்சிலர் ஒருவர் கையெறி குண்டுகளை வீசியதில், 26 பேர் காயமடைந்ததாக தேசிய காவல்துறை தெரிவித்துள்ளது.
ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட, 3 இஸ்ரேலிகளின் உடல்களை காசாவில் இருந்து, இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.
பெய்ஜிங்கில் மெட்ரோ ரயில்கள் மோதல்- 515 பேர் காயம்
சீன தலைநகர் பெய்ஜிங்கில் இரண்டு சுரங்கப்பாதை ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 515 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சீன ஆய்வு கப்பலுக்கு இலங்கை, மாலத்தீவுகள் அனுமதி வழங்க இந்தியா எதிர்ப்பு
சீன ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6, இலங்கைக் கடற்கரையில் தனது ஆய்வை முடித்து டிசம்பர் 2 ஆம் தேதி சிங்கப்பூரை அடைந்தது.
ஜனவரி 2024 முதல் அனைவருக்கும் இலவச விசா வழங்கும் கென்யா
அடுத்தாண்டு முதல் இலவச விசா வழங்கும் நாடுகள் பட்டியலில், கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவும் இணைந்துள்ளது.
2023ஆம் ஆண்டின் முக்கிய உலக நிகழ்வுகள்: ஒரு பார்வை
2023ஆம் ஆண்டு இன்னும் சில தினங்களில் முடிய உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த மிக முக்கிய உலக நிகழ்வுகளை நினைவுகூருவது அவசியம்.
கியேவ் மீது ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 53 பேர் காயம், குழந்தைகள் மருத்துவமனை சேதம்
உக்ரைன் தலைநகரமான கியேவ் நகரத்தின் மீது இன்று காலை ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் குழந்தைகள் மருத்துவமனை சேதமடைந்தது.
COP28 மாநாடு: புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க முதல் ஒப்பந்தம்
துபாயில் நடைபெற்று வரும் COP28 காலநிலை உச்சி மாநாட்டில், 200 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களைத் தடுக்க, புதைபடிவ எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டைக் குறைக்கத் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய ராஜ்யத்தின் சர்வதேச மாணவர்களின் சார்பு கொள்கையில் மாற்றம்: இந்தியர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்துமா?
ஐக்கிய ராஜ்ஜியத்திற்கு புலம்பெயரும் மக்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த கடந்த வாரம் அந்நாட்டு அரசு விசா நடைமுறைகளில் பல புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
காசா தாக்குதலால் இஸ்ரேல் உலகளாவிய ஆதரவை இழக்கிறது- நெதன்யாகுவுக்கு பைடன் எச்சரிக்கை
ஹமாஸுக்கு எதிரான அதன் "கண்மூடித்தனமான" தாக்குதலால், காசா மீதான போரில் உலகளாவிய ஆதரவை இஸ்ரேல் இழக்க நேரிடும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை எச்சரித்துள்ளார்.
காசா போர் நிறுத்தம் கோரும் ஐநா தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது
நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் உடனடி மனிதாபிமான போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடைக்கிய வரைவு தீர்மானம் ஒன்று, நேற்று (டிசம்பர் 12) ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
சிறைவைக்கப்பட்ட ரஷ்ய அதிபர் புடினின் அரசியல் எதிரி திடீர் மாயம்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் தீவிர அரசியல் எதிரியாக கருதப்படும் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் இருந்து காணாமல் போனதாக அவரது கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் ராணுவ தளத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 23 பேர் பலி
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ராணுவ தளத்தில் இன்று (டிசம்பர் 12) நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டதாக AFP செய்தி வெளியிட்டுள்ளது.
பொதுமக்களுடன் நீந்திய வைரல் திமிங்கலம் ஆஸ்திரேலிய கடற்கரையில் இறந்தது
மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் அருகே உள்ள ஒரு பிரபலமான கடற்கரையில் உள்ள மணற்பரப்பில், கடந்த வார இறுதியில் தென்பட்ட திமிங்கலம் இறந்தது.
ஹமாஸ் "கலைக்கப்படும் தருவாயில்" இருப்பதாகக் இஸ்ரேல் அறிவிப்பு
காசா பகுதியில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், பாலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் கலைக்கப்படும் தருவாயில் உள்ளதாக அறிவித்துள்ளது.
செங்கடலில் வர்த்தக கப்பல் மீது ஹூதி போராளிகள் ஏவுகணை தாக்குதல்: அமெரிக்கா தகவல்
ஏமனின் ஹூதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில், வர்த்தக எண்ணெய் கப்பல் சேதமடைந்ததாக, இரண்டு அமெரிக்க அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளனர்.