இஸ்ரேலால் தவறாகக் கொல்லப்பட்ட பணயக்கைதிகள் மீதமுள்ள உணவை பயன்படுத்தி அவசர செய்தி அனுப்பியது அம்பலம்
காஸாவின் ஷெஜய்யாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இஸ்ரேலியப் படைகளால் தவறுதலாக மூன்று பணயக்கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட அம்மூன்று பணயக்கைதிகளும், உதவிக்காக முறையிடும் SOS அவசர செய்தி குறிப்புகளை எழுதுவதற்கு எஞ்சிய உணவைப் பயன்படுத்தினர் என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF), பிபிசி நிறுவனத்திடம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளது. அவர்களை தவறுதலாக சுட்டுகொன்றதையும், IDF அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட குறைந்தது 120 பணயக்கைதிகள், இன்னும் காசா பகுதியில் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
'போர் விதிகளுக்கு' எதிராக 3 பேர் சுடப்பட்டனர் : IDF
"போர் விதிகளுக்கு" இஸ்ரேலிய படைகளால் கொல்லப்பட்ட மூன்று பணயக்கைதிகளும், தங்கள் கைகளில் வெள்ளை துணி ஏந்தி, அதில் SOS செய்தி எழுதியிருந்தனர் என The Jerusalem Post தெரிவிக்கிறது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, உலக நாடுகளிடம் இருந்து, பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸுடன் சமாதான உடன்படிக்கை செய்ய இஸ்ரேல் மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இறந்த பணயக்கைதிகளான யோதம் ஹைம் (28), சமர் தலால்கா (22), மற்றும் அலோன் ஷம்ரிஸ் (26) ஆகியோர் அக்டோபர் 7 தாக்குதல்களின் போது ஹமாஸால் கடத்தப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹீப்ரு மொழியில் உதவி கேட்ட பணயக்கைதிகள்
பணயக்கைதிகள் ஒரு கட்டிடத்தில் இருந்து சட்டையின்றி வெளியே வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அதில் ஒருவர் ஒரு குச்சியில் ஒரு வெள்ளை துணியை வைத்திருந்தார். அவர்கள் ஹீப்ரு மொழியிலும் உதவிக்காக கூக்குரலிட்டனர் என்றும், ஆனால் ஒரு இஸ்ரேலிய சிப்பாய் தான் அச்சுறுத்தப்படுவதாக தவறாக நினைத்து, அவர்களை "பயங்கரவாதிகள்" என கருதி சுட்டார் என ஒரு இஸ்ரேலிய இராணுவ அதிகாரி BBC க்கு கூறினார். அதில், இரண்டு பணயக்கைதிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர் என்றும், மூன்றாமவர் படுகாயமடைந்து இறந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.